Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு தேர்தல்.. திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்! என்ன காரணம்

ஈரோடு கிழக்கில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், அங்குப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.. இதற்கிடையே அங்கு திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. மிக விரைவிலேயே வெளியான இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

 ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஆளும் கட்சி என்பதால் இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக இறங்குகிறது. திமுக இந்தத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை.. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையாவார். வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே, திமுகவினர் அங்குப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். மூத்த அமைச்சர்கள் பலரும் அங்கு முகாமிட்டுள்ளனர். வரும் நாட்களில் முதல்வர் ஸ்டாலினும் அங்குப் பிரசாரம் செய்யவுள்ளார்.

 தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்

அதேபோல இந்த இடைத்தேர்தலில் வென்று, ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சி தர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக இறங்குகிறது. முதலில் அங்கு வேட்பாளர் அறிவிப்பில் சற்று குழப்பம் நிலவிய போதிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பிறகு அனைத்தும் தெளிவானது. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அதேபோல குக்கர் சின்னம் கிடைக்காது என்று கூறி டிடிவி தினகரனும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதன் மூலம் பல தேர்தல்களுக்குப் பிறகு, இரட்டை இலை வாக்கு முழுவதுமாக அதிமுகவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதனால் அதிமுகவினர் ஈரோடு கிழக்கில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர். பல மூத்த அதிமுக நிர்வாகிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். 1000 உரிமை தொகை விவகாரத்தைக் குறிப்பிட்ட அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.. இதற்கிடையே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அங்குப் பிரசாரத்தைத் தொடங்கினார். அவரும் உரிமை தொகை வழங்கப்படாது மற்றும் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தம் குறித்தே கேள்வி எழுப்பினார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

 பணிமனைகளுக்குச் சீல் வைப்பு

பணிமனைகளுக்குச் சீல் வைப்பு

இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதியின்றி செயல்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. திமுக பணிமனைகள் 10 மற்றும் அதிமுக பணிமனைகள் 4 என இதுவரை மொத்தம் 14 பணிமனைகளுக்குச் சீல் வைத்துள்ளனர். அப்போது அனுமதியின்றி அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைக்க விடாமல் அதிமுகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உதவியுடன் சீல் வைக்கப்பட்டது.

 என்ன காரணம்

என்ன காரணம்

தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். அனுமதியில்லாமல் செயல்பட்ட பணிமனைகளைக் கண்டறிந்து சீல் வைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

 ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் போட்டியிடக் கடந்த ஜன.31 முதல் பிப். 7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. வரும் பிப். 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில், அங்குப் பாதுகாப்பிற்குத் துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+