Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடூர பசியால் கணவர், தாய் இறப்பு.. அழுகிய சடலங்களுடன் வசித்த பெண்.. கோபியில் நெஞ்சை உலுக்கிய கோரம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல நாட்கள் பசியால் கணவரும் தாயும் இறந்து உடல் அழுகிய நிலையில் சடலங்களுடன் வசித்து வந்த மூதாட்டி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கனகாம்பாள் (80). இவர்களது மகள் சாந்தி (60). இவருக்கு திருமணமாகிவிட்டது.

இவர் தனது கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார் (34), மகள் சசிரேகா ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். சரவணக் குமார் மனவளர்ச்சி குன்றியவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிரேகாவிற்கு திருமணமாகி காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சாந்தி

சாந்தி

இந்த நிலையில் சாந்தி வசித்து வந்த குமணன் வீதி பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீடுவீடாக சோதனையிட்ட போது சாந்தியின் வீட்டு வாசலில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வீசியது.

விசாரணை

விசாரணை

இதனால் போலீஸார் சாந்தியின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் சாந்தியின் தாய் கனகாம்பாள், கணவர் மோகனசுந்தரம் ஆகியோர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலங்கள் வீட்டுக்குள்

சடலங்கள் வீட்டுக்குள்

இதையடுத்து சாந்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியவில்லை, அதனால் சடலங்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தாக சாந்தி தெரிவித்தார். கணவர் மோகனசுந்தரம் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாம். தாய் கனகாம்பாள் இறந்து 2 நாட்கள் ஆனதாக சாந்தி தெரிவித்தார்.

கூலி வேலை

கூலி வேலை

தன் உடலில் தெம்பிருந்தவரை மோகனசுந்தரம் வாட்ச்மேன் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவரால் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் சசிரேகா கூலிவேலைக்கு சென்று காப்பாற்றி வந்தார். ஆனால் அவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சாந்தியின் வீட்டில் வறுமை குடியேறிவிட்டது. யாரிடமும் எந்த உதவியும் கேட்டும் பலனில்லை.

பசியால் இறப்பு

பசியால் இறப்பு

இதனால் மோகனசுந்தரம், கனகாம்பாள், சாந்தி ஆகியோர் பசியின் கொடுமையில் இருந்தனர். நீண்ட நாள் பசியால் வாடிய மோகனசுந்தரம் பசியின் கோரபிடியில் சிக்கி பலியாகிவிட்டார். இதைத் தொடர்ந்து கனகாம்பாளும் பசியால் இறந்துவிட்டார். இதுகுறித்து சாந்தி கூறுகையில் கணவரும் தாயும் இறந்துவிட்டனர். அவர்களை அடக்கம் செய்யக் கூட என்னிடம் காசு இல்லை. அவர்கள் உடல்நலக் குறைவால் நலிவடைந்துதான் இறந்தார்கள். வேறு ஏதும் காரணம் இல்லை. இன்று ஒரு இடத்தில் காசு கேட்டிருந்தேன். அது வந்தால் அடக்கம் செய்வதாக இருந்தேன். அதற்குள் நீங்களே வந்துவிட்டீர்கள் என தெரிவித்தார். சாந்தியும் உணவில்லாமல் கைகள், முகம் எல்லாம் ரத்தமின்றி வெளீர் என இருந்தார். இதையடுத்து காவல் துறையினர் தங்களது சொந்த செலவில் உடல்களை அடக்கம் செய்வதாக தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+