இளம் வயதில் துயர முடிவு.. கணவருக்கு இதய நோய்..வேதனையில் கணவருடன் மனைவி தற்கொலை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று, கணவருக்கு வந்த இதயநோயால் மனம் உடைந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயராஜ். 27 வயதாகிறது. இவருக்கு இதய நோய் இருந்தது. இவரது மனைவி பெயர் கெளதமி. இவருக்கு 23 வயதாகிறது.
இதய நோய் சிகிச்சைக்காக பல ஊர்களுக்கும் போய் பார்த்தனர். இருப்பினும் விஜயராஜின் பிரச்சினை தீரவில்லை. இதையடுத்து ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதமாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார் விஜயராஜ். அதில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்துள்ளது. இதையடுத்து மீண்டும் வீடு திரும்பினார் விஜயராஜ். ஆனால் அங்கு போன பின்னர் மீண்டும் சுகவீனம் அடைந்தார்.
இதையடுத்து மறுபடியும் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருடன் மனைவி கெளதமி, தாயார் தேவகி ஆகியோர் தங்கியிருந்தனர். புதன்கிழமையன்று தேவகி அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார். அறைக்குள் விஜயராஜும், கெளதமியும் இருந்தனர். சற்று நேரத்தில் கதவைப் பூட்டியுள்ளனர். பின்னர் கதவு திறக்கவேயில்லை.
இதனால் சந்தேகமடைந்த தேவகி, நர்ஸ்களிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து கதவைத் தட்டிப் பார்த்தனர். பின்னர் அறையின் பின்பக்கம் உள்ள கதவைத் திறந்து உள்ளே போய்ப் பார்த்தபோது விஜயராஜும், கெளதமியும் வாயில் நுரை தள்ளியபடி காணப்பட்டனர். அரை மயக்கத்தி்ல அவர்கள் இருந்தனர். இதையடுத்து டாக்டர்கள் விரைந்து வந்து அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால் அது பலன் தரவில்லை, இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிள் பழத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து இருவரும் சாப்பிட்டுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications