அதிர்ச்சி..ஈரோட்டில் சார்ஜ் போட்ட செல்போன் வெடித்து தீப்பிடித்த குடிசை.. உடல் கருகி தொழிலாளி பலி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரவில் செல்போன் சார்ஜ் போடப்பட்ட நிலையில் திடீரென்று வெடித்து குடிசை தீப்பிடித்தது. இதில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
Recommended Video
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று இரவு குடிசை வீட்டில் தூங்கும் போது சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்ததில் ஒருவர் தூங்கும்போது உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கூலமூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 34). பிஏ பட்டதாரி. இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் கஸ்தூரி (32).
வழக்கம்போல் நேற்று இரவு பணியை முடித்து வீடு திரும்பினார். அதன்பிறகு வீட்டில் மனைவி கஸ்தூரி தூங்கவே அர்ஜூன் தனது வீட்டில் அருகே உள்ள குடிசை வீட்டில் இரவில் தூங்க சென்றார்.

செல்போன் வெடித்து தீ விபத்து
அர்ஜூன் தூங்க சென்ற வீடானது இரும்பு தகரம் மற்றும் தென்னை ஓலைகளால் ஆனாது. இதையடுத்து அங்கு அவர் தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கினார். இந்த வேளையில் திடீரென்று சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்து சிதறியது. இதையடுத்து மின்கசிவு ஏற்பட்டு குடிசை தீப்பற்றி எரிந்தது.

தீயில் சிக்கிய இளைஞர்
இதனால் தீயில் சிக்கி கொண்ட அர்ஜூனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு கண்விழித்த மனைவி கஸ்தூரி கணவர் அர்ஜூன் தீயில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினரிடம் உதவி கோரினார். கணவரை காப்பாற்றும்படி கதறினார்.

உடல் கருகி பலி
இதையடுத்து அங்கு வந்தவர்கள் குடிசை வீட்டில் பிடித்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் அதற்குள் அர்ஜூன் பரிதாபமாக உடல் கருகி இறந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை
இதுபற்றிய அர்ஜூனின் மனைவி கஸ்தூரி சிருவாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் சார்ஜ் போட்ட செல்போன் வெடித்து ஏற்பட்ட மின்கசிவால் குடிசை தீப்பிடித்து இளைஞர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications