யூடியூபர் ஆரிப் ரஹ்மான் தனது காரை விற்று, ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு செய்த உதவி
ஈரோடு: சென்னையைச் சேர்ந்த யூடியூபர் ஆரிப் ரஹ்மான் தனது காரை விற்று அதில் கிடைத்த பணத்தில், ஹெச்ஐவி தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கி உள்ளார்.
பலரும் தன்னிடம் உள்ள பணத்தில் தீபாவளிக்கு எப்படி துணி எடுக்கலாம், எப்படி செலவு செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். ஒருசிலர் தங்களை போல் தீபாவளி கொண்டாட முடியாமல் கஷ்டப்படுவோர் குறித்து யோசிப்பார்கள். அவர்கள் தங்களை போல் ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வார்கள். அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த யூடியூபர் ஆரிப் ரஹ்மான் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார்.

அதுவும் எப்படி செய்தார் என்பது தான் இங்கு ஹைலைட்டே.. பணம் இருப்பவர் மட்டுமல்ல. மனம் இருப்பவரும் உதவலாம் என்பதை உணர்த்தியுள்ளார் யூடியூபர் ஆரிப் ரஹ்மான் ரகுமான். அவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த யூடியூபர் ஆரிப் ரஹ்மான், தனது காரை விற்று அதில் கிடைத்த பணத்தில், ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள HIV தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு, உணர்வுகள் என்ற அமைப்பின் மூலமாக தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று ஈரோட்டில் நடந்தது.

இதனிடையே யூடியூபர் ஆரிப் ரஹ்மான் கூறும் போது, சின்ன சின்னதாக உதவிகளை செய்து வந்தேன்..எனக்கு வரும் பணத்தில் பெரிதாக உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதன்படியே ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல உடையாக வாங்கி கொடுக்க விரும்பினேன். தீபாவளி நேரத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தது. அதன்படியே வழங்கி உள்ளேன்.
அடுத்த கட்டமாக அரசின் அனுமதியுடன் இந்த குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்தகைய குழந்தைகளை சமூகத்தில் புறக்கணிக்காமல் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புத்தாடை பரிசளித்த ஆரிஃப் ரஹ்மானை ஈரோடு அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள்.

இதனிடையே ஒவ்வாருவரும் இதுபோல் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு செய்தால், அவர்களும் தீபாவளியை கொண்டாடுவார்கள் என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உணர்வுகள் அமைப்பினர் தெரிவித்தனர். தீபாவளியை ஆரிப் போல் பலர் அனாதை இல்லங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லங்களிலும் கொண்டாடுவார்கள். இது போன்ற செயல்களை செய்யும் பலரும் பாராட்டுக்குரியவர்கள் தான்..













Click it and Unblock the Notifications