ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. உங்களது டெய்லிஹன்ட்டில் நேரலையாக
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரிக்கு ஒரு கட்டமாகவும், அஸ்ஸாம், மேற்கு வங்காள மாநில சட்டசபைகளுக்கு பல கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் அதிமுக, 3வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் மும்முரத்தில் உள்ளது. அதேசமயம், திமுக தலைமையிலான கூட்டணி மிகக் கடுமையான போட்டியை அதிமுக கூட்டணிக்குக் கொடுத்து களத்தில் உள்ளது. 10 வருடத்திற்கு முன்பு பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற துடிப்புடன் காத்திருக்கிறது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாட்டையே தன் பக்கம் திரும்ப வைத்து 38 தொகுதிகளில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றியை மீண்டும் பதிவு செய்ய ஆவலாக உள்ளது திமுக.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியும், அதை எதிர்த்து பாஜகவும் நேருக்கு நேர் களத்தில் உள்ளன. முதல்வர் மமதா பானர்ஜி 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் பாஜகவின் புதிய கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. தற்போது புதுச்சேரி ஜனாதிபதி ஆட்சியின் கீழ் உள்ளது. காங்கிரஸின் கோட்டையாகவே இதுவரை புதுச்சேரி இருந்து வந்துள்ளது. இம்முறை அது கலர் மாறுமா என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
கேரளாவில் வலுவான ஆளும் இடதுசாரிக் கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களத்தில் உள்ளது. பாஜகவும் இந்த முறை ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.
அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையும் டெய்லிஹன்ட் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. தேர்தல் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. மாறாக பல்வேறு புள்ளிவிவரங்கள், ஆய்வுகள், முந்தைய தரவுகள் என அனைத்தும் அடங்கியதே. அது அனைவருக்கும் இந்தத் தேர்தல் குறித்த சுவாரஸ்யத்தைக் கூட்டும்.
புள்ளிவிவரங்களை மட்டும் அடுக்காமல், தேர்ந்த ஆய்வுக் கட்டுரைகளையும் நாங்கள் வாசகர்களுக்குக் கொடுக்கவுள்ளோம். சாமானியர் முதல் அனைவருக்கும் புரியும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகளை உங்களுக்கு அளிக்கவுள்ளோம்.
இந்தியா முழுவதும் எங்களிடம் உள்ள சிறந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை நேரடியாக உங்களுக்கு அளிக்கவுள்ளோம்.
மாநில அளவிலான மாற்றங்கள், சமூக வலைதள ரியாக்ஷன்கள், டிவிட்டர் டிரெண்டுகள், லைவ் வீடியோக்கள், வைரல் மீம்ஸ்கள், டிரெண்டிங் ஸ்டோரிகள் உள்ளிட்டவற்றை மிகவும் விரிவாக உங்களுக்கு வழங்க தயாராக உள்ளது டெய்லி ஹன்ட். எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications