உங்களின் சிறு உதவி இதய நோயால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தையின் உயிர் காக்க உதவும்.. ப்ளீஸ்
சென்னை: கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1 வயது குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறிய உதவி கூட பெரிய பலனை கொடுக்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். இவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் திருமணமானது. இவருடைய மனைவி பெயர் சந்தியா. சுபாஷ் ஒரு கூலி தொழிலாளி. திருத்தணியில் உள்ள செங்கல் சூளையில் லாரியில் லோடு ஏற்றும் வேலையை செய்து வருகிறார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.300 கூலியாக கிடைக்கிறது. இப்படி என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும், இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் ஒரே சந்தோஷம் இவர்களுடைய குழந்தைகள்தான். சுபாஷ்-சந்தியாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

கடைக்குட்டி ஜான்சீனா ஒரு வருடத்திற்கு முன்னர்தான் பிறந்தார். ஆனால் இவர் பிறந்த சில நாட்களிலேயே கடும் நெருக்கடிகளை சந்தித்தார். அதாவது, ஜான்சீனாவுக்கு தீவிரமான மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. திடீரென நள்ளிரவில் காரணமே இல்லாமல் அழும் ஜான்சீனாவை சுபாஷ், சந்தியாவால் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மனவேதனை இருக்கும். எனவே அவர்கள் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்துகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். இப்படி இருக்கையில் எதிர்பாராத விதமாக தனியார் மருத்துவர்களை சந்திக்க நேர்ந்த போது குழந்தையின் இதயத்தில் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் இதனை ஆப்சென்ட் பல்மோனரி வால்வ் சிண்ட்ரோம் (TOF) என்று கூறியுள்ளனர். இது பிறக்கும் போதே ஏற்படும் ஒரு வகை இதய பிரச்னையாகும். இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாகும்.

இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3.50 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒரு கூலி தொழிலாளியால் இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து திரட்ட முடியும்? எனவே வாய்ப்புள்ளவர்கள் இந்த குழந்தைக்காக உதவுங்கள். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியமாகும். அதேபோல சிறிய உதவி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே தாமதிக்காமல் குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications