இதயத்தில் பாதிப்பு.. உயிருக்கு போராடும் 5 வயது குழந்தை.. கொஞ்சம் சீக்கிரம் உதவுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறவி இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை மேற்கொண்டு வரும் 5 வயது குழந்தை பிரதிக்சாவிற்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

கன்னியம்மாள் அப்போது கர்ப்பமாக இருந்த நேரம். அவரின் குழந்தை பிரதிக்சா பிறக்கும் முன், மருத்துவர்கள் செய்த சோதனை பெரிய அதிர்ச்சி அளித்தது. பிரதிக்சா பிறக்கும் போதே பிறவி இதய குறைபாட்டோடு பிறப்பார் என்று மருத்துவர்கள் சோதனையில் கண்டுபிடித்தார்கள். பிரதிக்சா பிறந்த போது, அவர் தொடர்ந்து 10 நாட்கள் இன்குபேஷனில் வைக்கப்பட்டு இருந்தார்.

Help to save 5 year old Prathiksha from congenital heart Disease

அதன்பின் வளரவளர பிரதிக்சா நன்றாகவே இருந்தார். அதிக சத்தம் கேட்டால் மட்டும் பிரதிக்சாவால் தாங்கி கொள்ள முடியாது. அவரின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் 5 வயதான பின்தான் அவருக்கு பிரச்சனை வந்தது.

அவரின் ஐந்து வயதில் பிரதிக்சா வெறும் 9 கிலோதான் இருந்தார். அவருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டது, இதனால் அவசர அவசரமாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பின் அவருக்கு இதயத்தில் பெரிய பிரச்சனை இருக்கிறது.

அவருக்கு சிகிச்சை செய்ய நிறைய பணம் தேவை என்று கூறினார்கள். அதேபோல் பிரதிக்சாவை மியாட் மருத்துவமனையில் சேர்க்கவும் பரிந்துரை செய்தனர். முதலில் செய்யப்பட்ட சிகிச்சைகளுக்கு பிரதிக்சாவின் குடும்பத்து உறவினர்கள் உதவினார்கள்.

Help to save 5 year old Prathiksha from congenital heart Disease

ஆனால் போக போக தற்போது ஐசியூ செலவு உள்ளிட்ட மற்ற சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லை. தொடர் சிகிச்சையால் பிரதிக்சா உடல் கொஞ்சம் முன்னேறி உள்ளது. ஆனால் இன்னும் மேற்கொண்டு சிகிச்சை செய்ய பிரதிக்சாவின் பெற்றோரிடம் பணம் இல்லை.

பிரதிக்சாவிற்கு மோசமான பிறவி இதய குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் Ebstein Anamoly of Right AV Valve, Large VSD, Severe PAH and Bi ventricular Dysfunction ஆகிய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.

பிரதிக்சாவிற்கு ஏற்கனவே PA Banding சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு பிரதிக்சாவிற்கு உடனடியாக ECMO செய்ய வேண்டும். இதற்கு ஆப்ரேஷன் செலவு 2,50,000 மற்றும் ஐசியு செலவு , தாங்கும் செலவு, சிகிச்சைக்கு பின்பான செலவு என்று நிறைய செலவுகள் உள்ளது.

Help to save 5 year old Prathiksha from congenital heart Disease

பிரதிக்சாவின் அக்கா ஹரிணிக்கும் இப்போது உடல் நிலை சரியில்லை. அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டள்ளது. அவருக்கு உடனடியாக உடலில் ரத்தம் மாற்ற வேண்டும். அவரின் உடலில் உள்ள ரத்தம் மொத்தமாக வைரஸ் தாக்கியுள்ளது. குழந்தை பிறந்து 6 நாட்களில் அவருக்கு இந்த குறைபாடு ஏற்பட்டது. இதனால் ஹரிணியின் உடலில் எலும்புகள், தசைகளை, தோல் என்று எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. வலது காலும் அவருக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு குழந்தைகளும் இப்படி நோயால் தாக்கப்பட்டு இருப்பது, அந்த குடும்பத்தை உடைத்து நிலைகுலைய வைத்துள்ளது. பிரதிக்சாவின் தந்தை தாமரை செல்வன், கார்மண்ட் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை பார்க்கிறார். அவரின் சம்பளத்தில் இவ்வளவு பெரிய சிகிச்சையை மேற்கொள்ள முடியாது.

பிரதிக்சா உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் பிரதிக்சா உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+