ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனி: ரத்து செய்யக்கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மன நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐசிஎல் - ஐபிஎல்லின் முன்னோடி

ஐசிஎல் - ஐபிஎல்லின் முன்னோடி

இந்தியாவில் ட்-20 கிரிக்கெட் தொடங்கியவுடன் ஐசிஎல் கிரிக்கெட் என்கிற ஒன்றை கபில்தேவ் ஆரம்பித்தார். இன்றைய ஐபிஎல்லின் ஆர்ம்பம் இதுதான். கபில்தேவ் ஆரம்பித்த கான்செப்டை பிடித்துக்கொண்ட பிசிசிஐ ஐபிஎல் என்பதை தொடங்கியது. இதனால் கபில்தேவில் ஐசிஎல் முடிவுக்கு வந்தது.

 ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஐபிஎல் போட்டிகள்

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஐபிஎல் போட்டிகள்


பிசிசிஐ ஐபிஎல்லை நடத்தினாலும் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை பெரும் செல்வந்தர்கள் எடுத்து அவர்கள் வீரர்களை ஏலத்தில் எடுத்து நடத்துகிறார்கள். உலகில் பல நாடுகள் இவ்வகையான போட்டிகளை நடத்தினாலும் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லுக்கு ரசிகர்கள் அதிகம் அதனால் வருமானமும் அதிகம் என்பதால் அதில் பங்கேற்க வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள்

ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள்

ஐபிஎல் அணிகளில் புகழ்பெற்ற அணி சிஎஸ்கே அணி ஆகும் காரணம் அதன் கேப்டன் தோனி ஆவார். சென்னையின், தமிழக மக்களின் அணிபோல் சிஎஸ்கே ஆகிப்போனது. ஐபிஎல் ஆரம்பித்த சில ஆண்டுகளில் சூதாட்ட பிரச்சினை எழுந்தது. 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதே தொடரில் விளையாடிய ராஜஸ்தானை ராயல்ஸ் அணிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை இரண்டு அணிகளும் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது.

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு

ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014 ஆம் அண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனு தள்ளுபடி

மனு தள்ளுபடி

தோனியின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, இந்த வழக்கில், தற்போது சாட்சி விசாரனை தொடங்கியுள்ள நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என கூறி சம்பத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சாட்சி விசாரணை எதிர் கொள்ள வேண்டும் என சம்பத் குமாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+