தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜி கர்நாடகாவில் கைது - நடுரோட்டில் மடக்கிய போலீஸ்
ரூ. 3 கோடி பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூர் : 3 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தபோது தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாசனில் இருந்து தப்பிக்க முயன்ற போது நடுரோட்டில் தமிழக காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
Recommended Video
ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 20 நாட்களாக தேடி வந்தனர். கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் பதுங்கியிருந்த ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

ஊர் ஊராக தேடுதல் வேட்டை
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்தனர். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடினர்.

தொடர் விசாரணைகள்
ராஜேந்திரபாலாஜிக்கு உதவியதாக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விருதுநகர் சாத்தூரில் ஒருபக்கம் விசாரணை நடத்தினாலும் வெளியூர்களிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் கடந்த 2 நாட்களாகவே காவல்துறையினர் தேடத் தொடங்கினர். தனிப்படை போலீசார் எங்கு சென்றாலும் அது பற்றி ராஜேந்திரபாலாஜிக்கு கரெக்டாக தகவல் கிடைத்து தப்பி வந்தார்.

ஓடி ஒளிந்த ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜிக்கு உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் கடந்த வாரம் ஒரு தனிப்படை டெல்லிக்கு சென்றனர்.
கைதாகி விடக்கூடாது என்பதற்காக ஊர் ஊராக ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வந்தார் ராஜேந்திர பாலாஜி. அவரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்று விடாமல் தனிப்படை போலீசார் விரட்டி வந்தனர்.

கர்நாடகாவில் சிக்கினார்
கர்நாடகாவில் ஹாசன் நகரில், ராஜேந்திரபாலாஜி பதுக்கி இருப்பதாக செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் கண்டு பிடித்தனர். தனிப்படையினர் வருவது அறிந்து காரில் தப்பிச் செல்ல முயன்ற ராஜேந்திரபாலாஜியை நடுரோட்டில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதன் மூலம் 20 நாட்களாக ராஜேந்திரபாலாஜி ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து விரைவில் அவர் விருதுநகருக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications