Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9 வயது சிறுமிக்கு 8 மாதங்களாக பாலியல் கொடுமை.. சிக்கிய காப்பக நிர்வாகி.. மனைவியும் சதி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, சிறுமிகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக புகார் உள்ளது. இந்நிலையில் ஓசூரில் உள்ள காப்பகத்தில் அதன் உரிமையாளரே 4 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவரின் மனைவி, பெண் ஆசிரியர் துணை சென்று தவறை மூடி மறைக்க பேரம் பேசிய கொடுமையும் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. அவர்கள் சார்பில் பெசோ என்கிற பெயரில் குழந்தைகள் இல்லம் நடத்தப்படுகிறது. அதில் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளியும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் 9 வயதாகும் சிறுமி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

sexual-harrasment-hosur-9-year-old-girl-sexual-harassment-case-5-arrested

சிறுமி பாலியல் வன்கொடுமை

கடந்த 12 ஆம் தேதி அந்த சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் சிறுமியின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் தாய் சென்று அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. சிறுமி சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரைக்கு சென்றது.

சிக்கிய காப்பக நிர்வாகி

அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி நிர்வாகி ஷாம் கணேஷ் (வயது 63) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் அவர் மீது போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நேற்று ஷாம் கணேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர், "சம்மந்தப்பட்ட காப்பகம் அங்கு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஷாம் கணேஷ் தான் காப்பக நிர்வாகி. தற்போது அங்கு 33 பேர் படித்து வருகிறார்கள். பெற்றோரை இழந்தவர்கள், தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரை இழந்தவர்கள் ஆகியோர் தங்கியுள்ளனர்.

மனைவியும் துணை

கடந்த ஜனவரி மாதம் முதல் ஷாம் கணேஷ், 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் கணேஷின் மனைவி ஜோஸ்பின் மற்றும் ஆசிரியை இந்திரா உள்ளிட்டோருக்கு தெரிந்துள்ளது. அவர்கள் தவறுக்கு துணை போகும் விதமாக செல்வராஜ், நாதமுரளி ஆகியோருடன் இணைந்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.

இந்த விஷயத்தை மூடி மறைக்க பேரம் பேசியுள்ளனர். இதுதொடர்பாக ஜோஸ்பின், இந்திரா, செல்வராஜ், நாதமுரளி ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அந்த காப்பகத்தில் வேறு சிறுமிகள் யாராவது பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+