"உல்லாசம், துரோகம், பிளாக்மெயில்.." 4 ஆண்டுகளில் 30 கோடி குவித்த மோசடி ராணி! மிரள வைக்கும் அர்ச்சனா

Subscribe to Oneindia Tamil

புபனேஷ்வர்: டாப் பணக்காரர்களைக் குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் கதையைக் கேட்டால், பல திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்து உள்ளது.

ஒடிசாவின் பசி மண்டலம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது அங்குள்ள கலஹண்டி மாவட்டம். பல நூறு ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் அங்கு ஏழ்மை அந்தளவுக்குத் தலைவிரித்து ஆடும்.

1990களில் அங்கு ஏழைக் குடும்பத்தில் பிறந்த அர்ச்சனா நாக், இப்போது அரண்மனை வீட்டில் வெளிநாட்டு கார்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஏழ்மை குடும்பம்

ஏழ்மை குடும்பம்

ஏழ்மை நிலையில் பிறந்த ஒருவர் உயர்ந்து கோடிஸ்வரனாக மாறுவது நல்லது தான். ஆனால், அதற்கு அர்ச்சனா தேர்ந்தெடுத்த குறுக்கு வழிதான் மிகவும் தவறான ஒன்று. கடந்த வாரம் தான் பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதாக அர்ச்சனா கைது செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முன்பு வரை ராணி போல வாழ்ந்த அர்ச்சனாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. திரைப்படங்களையே மிஞ்சும் அர்ச்சனாவின் கதையை உண்மையில் படம் எடுக்கவே சிலர் திட்டமிட்டுள்ளனர்.

பிளாக் மெயில்

பிளாக் மெயில்

வெறும் 26 வயதான இந்த அர்ச்சனா அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் எனச் செல்வாக்கான நபர்களுடன் நெருங்கிப் பழகுவாராம். அவர்களுக்குப் பெண்களையும் சப்ளே செய்யும் அர்ச்சனா தனிமையில் தனிமையில் உல்லாசமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, அதை வைத்து பிளாக்மெயில் செய்து, மிரட்டி பணம் பறிப்பார். அதுவே அவரது முழு நேரத் தொழிலாம்.

அழகு நிலையம்

அழகு நிலையம்

ஒடிசாவின் கலஹண்டியில் உள்ள லான்ஜிகரில் பிறந்த அர்ச்சனா.. 2015இல் புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு முதலில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்த அர்ச்சனா, பின்னர் அழகு நிலையத்தில் சேர்ந்து உள்ளார். அப்போது பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜகபந்து சந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

விபசாரம்

விபசாரம்

உயர் ரக கார் ஷோரூமை நடத்தி வந்த ஜகபந்துக்கு அங்குள்ள தொழிலதிபர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்கள் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி அர்ச்சனாவும் அவர்களுடன் நெருங்கிப் பழகி உள்ளார். மேலும், அவர்களுக்குத் தேவைப்படும்போது பெண்களையும் சப்ளே செய்ததாகக் கூறப்படுகிறது. அழகு நிலையத்தில் வேலை செய்த போதில் இருந்தே அர்ச்சனா, பல பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிளாக்மெயில்

பிளாக்மெயில்

செல்வாக்கான நபர்கள் தனிமையில் உல்லாசமாக இருக்கும் போது, அதை ரகசியமாக வீடியோ எடுப்பாராம் அர்ச்சனா. அதன் பின்னர் அதையே வை்து பிளாக் மெயில் செய்து பணத்தைப் பறிப்பார். இப்படித்தான் சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறார். அவர் இது தொடர்பாக போலீசாரிடம் அளித்த புகார். அளித்துள்ளார். அதேபோல மற்றொரு பெண்ணும் அர்ச்சனா தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாகப் புகார் அளித்தார்.

திரைப்படம்

திரைப்படம்

அதன் அடிப்படையில் கடந்த அக்.6ஆம் தேதி ஒடிசா போலீசார் அவரை கைது செய்தனர். அவர் யாரெல்லாம் எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இதற்கிடையே ஒடியா திரைப்பட தயாரிப்பாளர் ஸ்ரீதர் மார்த்தா, அர்ச்சனாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருவர் மட்டுமே புகார்

இருவர் மட்டுமே புகார்

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அர்ச்சனாவும் அவரது கணவரும் 30 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்து உள்ளனர். இது அத்தனையும் இப்படி பிளாக்மெயில் செய்து வாங்கியதாகவே இருக்கும் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதுவரை இருவர் மட்டுமே அர்ச்சனாவுக்கு எதிராகப் புகார் அளித்து உள்ளனர். அவரிடம் ஏமாந்த மற்றவர்களும் தைரியமாகப் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

அரசியல் அரங்கு

அரசியல் அரங்கு

அரசியல் அரங்கிலும் இந்தச் சம்பவம் எதிரொலிக்கிறது. ஆளும் பிஜேடி கட்சியின் பல எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் இதில் தொடர்பு இருப்பதாகவும் இது வெளியானால் நவீன் பட்நாயக் ஆட்சி கவிழும் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. அதேபோல 18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக பாஜக சாடியுள்ளது. இருப்பினும், இதை ஆளும் பிஜேடி திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+