ஆற்றில் துணி துவைத்த மனைவி.. துடிதுடிக்க வெட்டிய கணவன்.. அடுத்த ஒருமணி நேரத்தில் தூக்கிய போலீஸ்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடும்பத் தகராறில் பிரிந்து இருந்த மனைவியை கணவன் அரிவாளால் வெட்டியதில் இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கிட்டு (27) இவரது மனைவி மஞ்சுளா (22).
இவர்களுக்கு 2 வயதில் திஜேஶ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கிட்டு வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அடிக்கடி சண்டை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்து சென்ற மஞ்சுளா கடந்த நான்கு மாதங்களாக தனது 2 வயது குழந்தையுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

சரமாரி
இந்த நிலையில் இன்று மஞ்சுளா அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருடன் சென்று மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கிட்டு மஞ்சுளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் தலை மற்றும் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார்.

தோழிக்கும் வெட்டு
இதில் படுகாயமடைந்த மஞ்சுளா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் மஞ்சுளாவை அவரது கணவர் கத்தியால் வெட்டிய போது உடன் இருந்த தோழி செல்வி தடுக்கச் சென்ற போது அவருக்கும் வலதுகைப் பகுதியில் வெட்டு காயமடைந்துள்ளார்.

வேலூர் மருத்துவமனை
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசார் விசாரணை
மனைவி மற்றும் தோழியை வெட்டிவிட்டு தப்பியோடிய கணவனை 1 மணி நேரத்தில் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியில் பதுங்கியிருந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி பகுதியில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications