அஸ்ஸாமிலிருந்து வந்த சோனு.. 20 வயசுதான்.. பலரிடம் சிக்கி .. விபச்சாரக் கும்பலிடமிருந்து மீண்ட சோகம்

அகமதாபாத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய பெண் மீட்கப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விபச்சார கும்பலிடம் 20 வயது பெண்.. சிக்கி சீரழிந்து.. படாத பாடு பட்டுவிட்டார்.. பல மாத காலம் கழித்து அந்த விபச்சார கும்பலிடம் இருந்து தப்பி வந்த செய்திதான் இது!

அசாம் மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு வயது 20 ஆகிறது.. இவரது சகோதரி ஹைதராபாத்தில் இருக்கிறார்.. அந்த வீட்டு கல்யாணத்துக்காக ஒருமுறை வந்தபோது, சோனு என்பவரை சந்தித்தார்.. உடனே லவ் வந்துவிட்டது.

 20 year old Assam girl, sold sex market in ahmadabad by her lover

கல்யாணம் பண்ணினால் உன்னைதான் பண்ணுவேன் என்று சோனு, எதை எதையோ சொல்ல எல்லாவற்றையும் அப்படியே நம்பினார் அந்த பெண்.. கடைசியில் பேசி பேசியே அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே வர சொல்லி உள்ளார் சோனு.. அதை நம்பிய இந்த பெண்ணும், வீட்டை விட்டு ஓடி வந்தார்.. 2 பேரும் அகமதாபாத்திற்கு சென்றனர். அந்த இடத்தில் லாட்ஜில் ரூம் போட்டு, நம்பி வந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் சோனு.

பிறகு காதலியை, அதே பகுதியில் விபச்சாரம் செய்யும் கும்பலிடமும் விற்றுவிட்டார்.. பல மாத காலம் இந்த கும்பலிடம் சிக்கி கொண்டிருந்திருக்கிறார்.. தப்பிக்க கூட வழியில்லையாம்.. அந்த விபச்சார கும்பல் ஒரு இடத்தில் இருக்க காணோம்.. ஒவ்வொரு இடங்களுக்கும் மாறி கொண்டே இருந்திருக்கிறது.

ஒவ்வொரு இடங்களிலும் அப்பெண் சீரழிந்தார்... கடைசியில் கோக்ரா வட்டாரத்தில் உள்ள பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் இந்த பெண் வந்து சேர்ந்தார்.. அந்த இடத்தில்தான் தப்பிக்க எதாவது வழி கிடைக்கும் என்று நம்பி உள்ளார்.. அப்போது கிடைத்த ஒரு செல்போனில் 100க்கு போன் செய்து போலீசிடம் தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சிவிட்டு உடனே போனையும் கட் செய்துவிட்டார்.

இதற்கு பிறகுதான் கன்ட்ரோல் ரூமுக்கு விஷயம் பறந்து, போலீசார் அந்த செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்து இடத்தை கண்டுபிடித்தனர்... பெண்ணையும் மீட்டனர். அவர் பேசும் பாஷைதான் சரியாக புரியவில்லையாம்.. எனினும், அந்த பெண்ணை அவருடைய பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சோனு உட்பட அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+