கண் முன் தீவைத்து எரிக்கப்பட்ட 4 குட்டிகள்.. கதறி தவித்த தாய் நாய்.. ஹைதராபாத்தில் பரிதாபம்!
4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டன.
ஹைதராபாத்: இப்போதைக்கு ஹைதராபாத்தில் நிலவி வரும் வயித்தெறிச்சல் சம்பவம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
கடந்த சனிக்கிழமையன்று 4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டன. இப்படி ஒரு கொடூரமான விஷயத்தை செய்தது யார் என தெரியவில்லை. ஆனால் பெற்ற தாயின் கண்முன்னே இந்த 4 குட்டிகளும் உயிரோடு எரிகின்றன.

கண்ணீர் விட்டு அழுதது
அதை பார்த்து தாய் நாய் என்ன செய்வதென்று தெரியாமல் இங்குமங்கும் ஓடுகிறது.. பதறுகிறது.. துடிக்கிறது.. கொளுத்து விட்டு எரியும் தீயை கண்டு நடுங்குகிறது.. பதட்டமாகிறது.. பரிதவிக்கிறது... கடைசியில் நாய்க்குட்டிகள் கருகி போன நிலைக்கு வரும்போது, வேற வழியே தெரியாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டது.

போராடிய குட்டி
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். தீயில் போராடி கொண்டிருந்த குட்டிகளை காப்பாற்ற முயன்றனர். 3 குட்டிகள் நெருப்பிலேயே வெந்து கருகிவிட்டன. ஒரே ஒரு குட்டிக்கு மட்டும் உயிர் இழுத்துகொண்டு இருந்தது. அதனால் அதை தூக்கி கொண்டு விலங்குநல மருத்துவரிடம் ஓடினார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த குட்டியும் இறந்துவிட்டது.

தாய் நாய் கதறியது
இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக போலீசிலும் புகார் தந்தனர். விரைந்து வந்த அவர்கள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, இப்படி ஒரு பாவத்தை செய்தவர்கள் யார் என கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளார்கள். நாய்க்குட்டிகள் எரிவதும், தாய் நாய் கதறுவதும் வீடியோவாகவும், போட்டோவாகவும் வெளியிடப்பட்டன.

மனித மிருகங்கள்
இதை பார்த்த ஒவ்வொருவரும் கண்ணீர் வடித்து வருகின்றனர். தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். மனிதர்களின் இந்த மிருக செயலினால் கண்ணீரை விட்டபடியே இருக்கும் தாய் நாய்க்கு இனி யாராலும் பதிலே சொல்ல முடியாது!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications