தெலுங்கானா: ஹைதராபாத் ரசாயன கிடங்கில் தீ- 9 பேர் பலி; நாகாலாந்து தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதேபோல நாகாலாந்து மாநிலம் திமாப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ஹைதராபாத் நம்பள்ளி பஜார்காட் பகுதியில் இன்று காலை கெமிக்கல் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த குடோனில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இத் தீ மளமளவென பரவி மேலே இருந்த அடுக்குடிமாடி குடியிருப்புகளிலும் பரவியது. பெரும் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.

இத்தீவிபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 16 பேரை தீயணைப்புத்துறையினர் பலத்த காயங்களுடன் மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நாகாலாந்து: நாகாலாந்தின் திமாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாகா இனமக்கள் அல்லாத பிற இனத்தவர் குடியிருக்கும் குடிசை பகுதிகளில் இத்தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. தீபாவளி பட்டாசு வெடிகளின் சிதறலில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி மொத்தம் 5 பேர் பலியாகினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications