Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரித்துறைக்கு ஏஐ செய்த பேருதவி.. பிரியாணி கடைகளில் 70 ஆயிரம் கோடி.. கண்டுபிடித்தது எப்படி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் பிரியாணி என்பது இந்தியாரிவன் மிகவும் பிரபலமான பிரியாணியாக உள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் பிரியானி என்ற பெயரில் அதிக அளவில் பிரியாணி விற்பனை நடக்கிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரியாணி உணவங்களில் 2019 முதல் தற்போது வரை சுமார் 70000 கோடி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 60 டெராபைட் தரவுகளை ஆய்வு செய்து வருமான வரித்துறைக்கு ஏஐ கண்டுபிடித்து கொடுத்துள்ளது. ஏஐ எப்படி கண்டுபிடித்தது என்பதை பார்ப்போம்.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல பிரியாணி உணவகங்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

70 000 crore fraud in Hyderabad biryani food How did AI betray the Income Tax Department

இந்த பிரியாணி உணவகத்திற்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. இந்நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த தகவலை தொடர்ந்து வருமான வரித்துறை 3 பிரபல பிரியாணி பிராண்ட் உணவகங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் ரெய்டு நடத்தியது.

70 ஆயிரம் கோடி மோசடி

இந்த ரெய்டில் பிரியாணி உணவகங்கள் பெரிய அளவில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 70 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இதுற்கு ஏஐ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏஐ கண்டுபிடித்தது

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட பில்லிங் மென்பொருளின் 60 டெராபைட் (TB) தரவுகளை ஏஐ மூலம் ஆய்வு செய்ததில், 2019-20 நிதியாண்டு முதல் தற்போது வரை குறைந்தது ₹70,000 கோடி மதிப்பிலான விற்பனை வருவாய் மறைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மறைக்கப்பட்ட வருமானத்திற்கான வரி மற்றும் அபராதத்தை அதிகாரிகள் இன்னும் கணக்கிடவில்லை. இந்த மென்பொருள் நிறுவனம் மட்டும் உணவக பில்லிங் மென்பொருள் சந்தையில் 10 சதவீதத்தைக் தன் வசம் வைத்துள்ளது.

ஏஐ மூலம் தரவு ஆய்வு

சுமார் 1.77 லட்சம் உணவக ஐடிகளின் தரவுகளை ஆய்வு செய்ய, வருமான வரி அதிகாரிகள், பிக் டேட்டா மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். இந்தியா முழுவதும் இந்த மென்பொருள் மூலம் பதிவு செய்யப்பட்ட பில்களில், சுமார் ₹13,317 கோடி மதிப்பிலான பில்கள் 'டெலிட்' செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் இவ்வாறு ₹5,141 கோடி மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள பிரபலமான 40 உணவகங்களில் நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் ₹400 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டிருககிறது. உதாரணமாக, ₹2,784 மதிப்பிலான ஒரு ரசீது , மென்பொருள் மூலம் திருத்தப்பட்டு வெறும் ₹27 ஆக மாற்றப்பட்டுள்ளது.

முன்னணியில் உள்ள மாநிலங்கள்

வரி ஏய்ப்பு அதிகமாகக் கண்டறியப்பட்ட முதல் 5 மாநிலங்கள் விவரம் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் சுமார் ₹2,000 கோடி வருமானம் டெலிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ₹1,500 கோடி வருமானம் டெலிட் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ₹1,200 கோடி அளவிற்கு ரசீது டெலிட் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் டெலிட் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மொத்த விற்பனையில் சுமார் 27% வருவாயை இந்த உணவகங்கள் மறைத்துள்ளதாக அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

மோசடி நடந்த விதம்: டெலிட் மற்றும் எடிட் எப்படி நடந்தது

உணவக ஊழியர்கள் அல்லது மேலாளர்கள் பணத்தைக் கையாடல் செய்யாமல் இருக்க, கார்டு, UPI மற்றும் ரொக்கம் என அனைத்து விற்பனையையும் மென்பொருளில் உள்ளீடு செய்கிறார்கள. ஆனால், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துவதைத் தவிர்க்க உணவக உரிமையாளர்கள் சில தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார்கள். ரொக்கப் பணமாகப் பெற்ற பில்களில் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அழித்துள்ளார்கள்

ஒட்டுமொத்தமாக நீக்கம்

குறிப்பிட்ட தேதிகளில் (உதாரணத்திற்கு 30 நாட்கள் வரை) நடந்த மொத்த பில்களையும் அப்படியே அழித்துவிட்டு, மிகக் குறைந்த விற்பனை நடந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. இந்த விசாரணை 2019-20 முதல் 2025-26 வரையிலான ஆறு நிதியாண்டுகளின் தரவுகளை உள்ளடக்கி உள்ளது.

பல லட்சம் கோடி மோசடி அம்பலமாகும்

முதலில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இந்தச் சோதனை, மோசடியின் வீரியம் தெரிந்த பிறகு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ₹70,000 கோடி என்பது வெறும் "பனிப்பாறையின் நுனி" மட்டுமே என்றும், சந்தையில் உள்ள மற்ற பில்லிங் மென்பொருள்களையும் ஆய்வு செய்தால் இன்னும் பல லட்சம் கோடி வரி ஏய்ப்பு வெளியே வரும் என்றும் அதிகாரிகள் கருதுகிறார்கள். இந்த டேட்டாக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அபராதம் விதிக்கவும் வருமான வரித்துறை தயாராகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+