சென்னை சுற்றுலா பேருந்து லாரி மீது மோதி விபத்து.. நெல்லூரில் பறிபோன 8 உயிர்கள்.. பலர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

நெல்லூர்: சென்னையில் இருந்து ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வடபழனியில் இருந்து ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் நகரத்திற்கு நேற்றிரவு சுற்றுலா பேருந்து புறப்பட்டது. நெல்லூர் அருகே கவாலி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து விலகி சென்ற போது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

8 died Many injured Chennai tourist bus collides with a lorry in Nellore

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், மீட்பு படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+