இறந்து போன அப்பா வந்துட்டாரும்மா! தத்ரூபமாக வடிக்கப்பட்ட மெழுகு சிலை.. முத்தமிட்ட மணமகள்! நெகிழ்ச்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாராங்கலில் திருமணம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.
சமீப நாட்களாக இறந்தவர்களின் மெழுகு சிலையை உருவாக்கி அதை வீட்டின் முக்கிய நிகழ்வுகளில் பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன் இறந்த தாயின் உருவத்தை அப்படியே மெழுகு சிலையாக உருவாக்கி இளைஞர் ஒருவர் தனது திருமணத்தில் பயன்படுத்தினார்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கூட பெண் ஒருவர் தனது இறந்து போன தந்தை உருவத்தை மெழுகு சிலையாக உருவாக்கி பயன்படுத்தி இருந்தார்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. தந்தையின் மெழுகு சிலை முன்பு அந்த பெண் திருமணம் செய்து கொண்டு ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்ற நெகிழ்ச்சியான சம்பவம் தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்துள்ளது. அங்கு பெண் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பிரம்மாண்ட மண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

சர்ப்ரைஸ்
திருமணத்தின் அன்று தனது தங்கைக்கு (மணமகள்) சர்ப்ரைஸ் கொடுக்க அவரின் அண்ணன் முடிவு செய்துள்ளார். ஏதாவது வாங்கிக்கொடுத்தால் அதில் என்ன சர்ப்ரைஸ் இருக்க முடியும். அதனால் தனது தங்கை மறக்காத ஒரு விஷயத்தை திருமணத்தின் போது செய்ய வேண்டும் முடிவு செய்து இருக்கிறார். இதையடுத்து இறந்த போன தங்கள் அப்பாவின் உருவத்தை அப்படியே மெழுகு சிலையாக வடிவமைத்து உள்ளார்.

மெழுகு சிலை
அதோடு திருமணத்திற்கு உறவினர்களுக்கு எடுக்கப்பட்டது போல ஷெர்வானி உடை எடுத்து அதை சிலருக்கு போட்டுவிட்டுள்ளார். இந்த மெழுகு சிலையோ அப்படியே தத்ரூபமாக ஒருவர் அமர்ந்து இருப்பது போல வடிவமைக்கப்பட்டது. அதோடு அந்த சிலைக்கு அப்பா அணிந்து இருந்தது போலவே ருத்ராட்ச மாலை, கண்ணாடி எல்லாம் அணிவித்து தத்ரூபமாக அப்பா போலவே திருமண மண்டபத்தில் அமர வைத்தார்.

அப்பா வந்துட்டாங்க
இந்த விஷயம்.. திருமணம் ஆக போகும் தங்கைக்கோ, இவர்களின் தாயாருக்கோ தெரியாது. திடீரென சர்ப்ரைசாக எல்லோரையும் அழைத்து வந்து சிலையை காண்பித்துள்ளார் அந்த இளைஞர். அம்மா.. இறந்து போன அப்பா தங்கச்சி கல்யாணத்தை பார்க்க வந்துருக்காங்க அம்மா என்று கூறி சிலையை காட்டி உள்ளார். இதை பார்த்த அம்மாவும், மணமகளும் அங்கேயே கண்ணீர்விட்டு அழுது உள்ளனர். உணர்ச்சி பெருக்கில் அங்கேயே அழுது உள்ளனர்.

நெகிழ்ச்சி
அவர்களின் தந்தை கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் இறந்துள்ளார். திடீரென அவரை போலவே அச்சு அசலாக இருக்கும் சிலையை பார்த்ததும் இரண்டு பேரும் கண்ணீர்விட்டு கதறி உள்ளனர். அதன்பின் திருமணம் முடிந்து இவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்பாவின் உருவத்தை பார்த்ததும்.. மணமகள் உணர்ச்சியை அடக்க முடியாமல் ஓடி வந்து, சிலைக்கு முத்தமிட்டது திருமண மண்டபத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விமர்சனம்
இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது. இதை வீடியோவாக அவர்களின் குடும்பம் யூ டியூபில் வெளியிட்டுள்ளது. இதை பலர் ரசித்து பாராட்டி உள்ளனர். இதெல்லாம் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் என்று கூறி உள்ளனர். அதே சமயம், இறந்தவர்கள் இபப்டி மெழுகு சிலையாக திருமணத்திற்கு கொண்டு வர கூடாது. அது தவறு. இதெல்லாம் நல்ல விஷயம் அல்ல என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications