முத்தி போச்சு.. திடீரென பிளேடை எடுத்து.. நாக்கை வெட்டி.. தெலுங்கானாவில் அரசியல் அக்கப்போர்
நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் ஒரு தொண்டர் காணிக்கையாக செலுத்தினார்.
ஹைதராபாத்: அது வேற ஒன்னும் இல்லை... பக்தி முத்தி போயிடுச்சுன்னா இப்படி சில சமயம் நடக்கும்!! ஆனா அது யார் மேல இருக்கிற பக்தின்னுதான் தெரியல!!
தெலுங்கானாவில் நாளையும், 11-ம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த மாநிலமே பரபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், ஆந்திரபிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ். 35 வயதாகிறது. இவர் தன் கட்சி தலைவர் வரும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று கோயிலுக்கு சென்று பலமுறை சாமி தரிசனம் செய்துள்ளார். அதோடு நிற்காமல் ஒரு வேண்டுதலையும் செய்ய முடிவெடுத்தார்.

உண்டியலில் காணிக்கை
அதன்படி மகேஷ் ஹைதராபாத்தின் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கே சாமி கும்பிட்டவர் திடீரென பாக்கெட்டிலிருந்து ஒரு பிளேடை எடுத்து தன் நாக்கை வெட்டி படார் என அங்கிருந்த உண்டியலில் காணிக்கையாக போட்டார்.

ரத்தம் கொட்டியது
மகேஷூடன் நின்று கொண்டு சாமி கும்பிட்ட மற்ற பக்தர்கள் இதை பார்த்து அலறியடித்து ஓடினார்கள். வாயிலிருந்து ரத்தம் பொலபொலவென கொட்டியது. ஒருசிலர் ஓடிச்சென்று மகேஷை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவரது கையில் ஒரு வேண்டுதல் லட்டரும் இருந்தது.

வேண்டுதல் கடிதம்
அதில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவுக்கு, தான் விரும்புபவர்கள் முதல்வர்களாக வேண்டும் என்றும், தனக்கு ஆந்திர பிரதேச அமைச்சரவையில் சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்றும் காணிக்கை செலுத்துவதாக எழுதி அந்த லட்டரை கையோடு மகேஷ் கொண்டு வந்திருக்கிறார்.

போலீசார் விசாரணை
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோயிலுக்குள்ளேயே மகேஷ் மயங்கி விழுந்தார். உடனே அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு அவரை தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன் தலைவனுக்காக நாக்கை வெட்டி காணிக்கையாக போட்ட இந்த சம்பவம் குறித்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

முத்தி போச்சு
தன்னுடைய தானை தலைவர் வெற்றி பெற, பொதுவாக தொண்டர்கள் தீச்சட்டி தூக்குவார்கள், காவடி எடுப்பார்கள், மண் சோறு சாப்பிடுவார்கள். இப்போது இதெல்லாம் தாண்டி உடல் உறுப்புகளை அறுத்து காணிக்கை தரும் அளவுக்கு "முத்தி" போய் விட்டது... பக்திதான்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications