"கோமாதா".. ஆசையாக போன பாஜக எம்பி.. "பக்கத்துல வராதே".. ஓங்கி உதைத்த பசுமாடு.. அதிர்ச்சி வீடியோ
ஹைதராபாத்: பாஜக எம்பி ஒருவரை பசுமாடு ஒன்று ஓங்கி உதைத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்கள் சிலர் பசுக்களை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். கோமாதா என்று பெயரை பசுக்களை இந்துக்கள் சிலர் வழிபடுவது வழக்கம்.
இந்தியாவில் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் இப்படி பசுக்களை வழிபாடு செய்யும் வழக்கம் அதிகரித்து உள்ளது. அதோடு பசுக்களை உணவாக உட்கொள்ள கூடாது என்றும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாஜக
பாஜக ஆளும் மாநிலங்கள் பலவற்றில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. தென்னிந்தியாவில் இந்த சட்டங்கள் இன்னும் கொண்டு வரப்படவில்லை. அதேபோல் பாஜக ஆளும் கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களிலும் பீப் அனுமதிக்கப்படுகிறது. பசுக்களை பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வழிபடுவது இயல்பாக நடக்கும் விஷயங்கள்தான். உதாரணமாக தேர்தலுக்கு முன்பாக பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பலர் பசுக்களின் கோமியத்தை தொடுவது, வழிபாடு செய்வது, குடிப்பது போன்ற செயல்களை மேற்கொண்டு உள்ளனர்.

மாடு
அதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களில் பசுமாட்டுக்கு என்று காப்பகம் அமைக்கும் திட்டங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன. பல கோடி செலவில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பசுக்களுக்கு என்று மிகப்பெரிய காப்பங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த காப்பங்களுக்கு என்று பொறுப்பு அமைச்சர்கள் பலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு என்று பட்ஜெட்டிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் தனியாக திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்திலும் இது தொடர்பாக பாஜக பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் பீப் தடை செய்ய வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பாஜக எம்பி ஒருவரை பசுமாடு ஒன்று ஓங்கி உதைத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை
ஆந்திர பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு இருக்கும் குண்டூர் சில்லி மார்க்கெட்டில் திறப்பு விழா ஒன்றிற்காக பாஜக எம்பி ஜிவிஎல் நரசிம்மா ராவ் சென்றுள்ளார். அவர் சென்ற போது திறப்பு விழாவிற்கு முன் கோமாதா பூஜை நடத்த வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். இதனால் மார்க்கெட்டில் இருந்த மாடு ஒன்றை தொழுவத்தில் கட்டி பூஜை செய்துள்ளனர். மாட்டிற்கு சந்தானம், மஞ்சள் பூசி மாலை அணிவித்து உள்ளனர். பொட்டு எல்லாம் வைத்து சிறப்பு பூஜை நடத்தி உள்ளனர்.

நரசிம்ம ராவ்
அதன்பின் எம்பி நரசிம்ம ராவ் அங்கே வந்து பசுமாட்டிற்கு பூஜை செய்ய முயன்றுள்ளார். இதற்காக அவர் மாட்டிற்கு அருகே வந்ததும்.. மாடு கிட்டே வராதே என்று சொல்வது போல ஓங்கி ஒரு உதை விட்டுள்ளது. சுற்றி அத்தனை பேர் இருந்தும் அந்த மாடு சரியாக குறி வைத்து அந்த பாஜக எம்பியை மட்டும் உதைத்து உள்ளது. இதில் பதறிய அந்த எம்பி நரசிம்ம ராவ் சட்டென சுதாரித்து பின்னால் நகர்ந்து நின்றுகொண்டார். அவர் இப்படி மாட்டிடம் உதை வாங்கிய சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இதை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்











Click it and Unblock the Notifications