பள்ளி தோழனை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்.. இந்தியா கொடுத்த மறக்க முடியாத பரிசு
அஹமதாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவில் உள்ள பள்ளித்தோழனை காதலித்து திருமணம் செய்த நிலையில், 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் இந்தியா வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கோமல் என்ற பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமைச் சான்றிதழை நேற்று முன்தினம் அமைச்சர் ஹர்ஷ் சங்வி நேரில் சென்று வழங்கினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த கோமலின் குடும்பம் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய சிரமங்களைச் சந்தித்த காரணத்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வந்துள்ளது. கோமலின் அப்பா கராச்சியில் தொழிலதிபராக இருந்துள்ளார். அவருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, கொள்ளை சம்பவங்கள் காரணமாகவும் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தாராம்.
அதன்படியே பாகிஸ்தானில் உள்ள தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ்க்கு பிழைப்பு தேடி மூன்று பெண் குழந்தைகளுடன் கடந்த 2009ம் ஆண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளி மாணவியாக இந்தியா வந்த கோமல், தன்னுடன் பள்ளியில் படித்த நண்பரான குஜராத்தைச் சேர்ந்த ஹிதேஷை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்திருக்கிறார். தற்போது அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்திய குடியுரிமை தனது மனைவிக்கு கிடைத்தது குறித்து கோமலின் கணவர் ஹிதேஷ் கூறுகையில், கோமலின் தந்தை பாகிஸ்தானின் கராச்சியில் தொழிலதிபராக இருந்த நிலையில், அங்கிருந்து மூன்று பெண் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு மிகுந்த கவலையுடன் இந்தியா வந்தார். சொத்துக்கள் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் குடியேறினார்
இதையடுத்து இந்திய பள்ளியில் தனது மூன்று மகள்களையும் சேர்த்து படிக்க வைத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு நான் படித்த சர்தார்நகரில் உள்ள பள்ளியில் மூன்று பேரும் படிப்பதற்காக வந்தார்கள். அப்போது நான் அங்கு 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது அந்த மூன்றுபேரையும் பாகிஸ்தானி சகோதரிகள் என்று அழைத்தார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை, ஏனெனில் இப்படி பேசுவது அநாகரிகம் என்று கூறினேன்.
என் சகோதரி கோமலுடன் அதே வகுப்பில் படித்தார். பாகிஸ்தானில் அவர்கள் சந்தித்த சிரமங்களை என்னிடம் கூறினார். அவர்கள் பாகிஸ்தானில் சந்தித்த நிலையைச் சொன்னதும், அவர்களிடம் அன்பு காட்டி பேசினேன் ஒரு கட்டத்தில் கோமலும் மற்றும் அவரின் சகோதரிகள் இருவர் என மூன்று பேரும் எனக்கு நண்பர்கள் ஆனார்கள்,
காலப்போக்கில் கோமலுடனான என் நட்பு காதலாக மாறியது. கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். தற்போது எங்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
14 வருடங்கள் கழித்து என் மனைவி கோமலுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. இதை, கடந்த 12ஆம் தேதி அமைச்சர் ஹர்ஷ் சங்வி அவரது கையால் என் மனைவியிடம் வழங்கினார்" என ஹிதேஷ் கூறினார்.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications