'தீ இது தளபதி'.. போலீஸ் தம்பதியின் ஃபிரி வெட்டிங் போட்டோ ஷூட்.. தாறுமாறாக இருக்கே வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் போலீஸ் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பு எடுத்த பிரி வெட்டிங் போட்டோ ஷுட் தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான காரணமே அவர்கள் பயன்படுத்திய வாகனமும், உடையும் தான்.. முழு விவரத்தை இப்போது பார்ப்போம்.

இப்போது எல்லாம் திருமணத்திற்கு முன்பான வெட்டிங் போட்டோ ஷூட்கள் மிகவும் பிரபலமாகிவிட்டது. கல்யாணத்திற்கு முன்பு போட்டோ வெட்டிங் ஷூட்கள் கேரளாவில் எல்லாம் வேறலெவலில் போய்விட்டது.நம்மூரில் இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. தெலுங்கானாவில் இந்த கலாச்சாரம் போலீஸ் வரை போய் இருக்கிறது.

 A police couples pre-Wedding Shoot in Hyderabad has sparked a huge debate in Telangana

திருமணம் என்பது ஒருவரது வாழ்வில் மிக முக்கியமான விஷயம். அதை தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு இனிமையான நிகழ்வுகளால் அலங்கரிக்க வேண்டும் என்று தம்பதிகள் விரும்புகிறார்கள். அப்படித்தான் ஹைதராபாத்தில் போலீஸ் ஆக உள்ள தம்பதிகள் செய்திருக்கிறார்கள். அது மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ளது.

ஹைதராபாத் போலீஸ் தம்பதியின் 2 நிமிட குறும்பட வீடியோவை பார்த்து பலர் பாராட்டி உள்ளார்கள். ஆனால் சிலர் விமர்சனமும் செய்திருக்கிறார்கள். ரவுரி கிஷோர் மற்றும் கே பாவனா ஆகியோர் ஹைதராபாத்தில் காவல்துறையில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் ஃபிரி வெட்டிங் வீடியோவை போலீஸ் ஸ்டேசனில் நடத்தி இருக்கிறார்கள். போலீசின் வாகனத்தில்இருவரும் மாறி மாறி இறங்குகிறார்கள். இருவருமே போலீஸ் உடையில் இருக்கிறார்கள். 'தீ இது தளபதி' என்ற பாடல் பின்னணியில் இடம் பெற்றுள்ளது. காதல் காட்சிகள், காவல்துறை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஹைதராபாத்தில் சார்மினார் மற்றும் லாட் பஜார் உள்ளிட்ட இடங்களில் தம்பதிகள் பாடி நடனமாடும் காட்சிகள் இருக்கின்றன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் வந்துள்ளனர். சில நெட்டிசன்கள் , போலீஸ் சொத்துக்களை தங்கள் தனிப்பட்ட வீடியோவிற்கு பயன்படுத்தக்கூடாது என்று கூறிய போதும், அவர்களை வாழ்த்தி உள்ளனர். அதேநேரம் இது ஆக்கப்பூர்வமான அணுகுமுறை என்று சிலர் பாராட்டவும் செய்திருக்கிறார்கள்.

அதேநேரம் நெட்டிசன் ஒருவர், சாமானியர் இப்படி போலீஸ் போல உடை அணிந்து செய்தால் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால் போலீசில் உள்ளவர்கள் இப்படி தவறாக பயன்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேநேரம் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சி.வி.ஆனந்த், இந்த வீடியோ குறித்து பதில் அளித்துள்ளார். அதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார், ஆனாலும் வீடியோ கொஞ்சம் சரியாக இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். அதேநேரம் படப்பிடிப்புக்கு முன்பு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்,. இனி முறையான அனுமதியின்றி இதுபோல் மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

போலீஸ் அதிகாரிகள் அந்த ஜோடியை வாழ்த்தி அதேநேரம், முன்பே தெரிவித்திருந்தால், படப்பிடிப்புக்கு கண்டிப்பாக சம்மதம் தெரிவித்திருப்போம் என்றார்கள். சமூக வலைதளங்களில் வைரலான காவல்துறை ஜோடியான ஜோடி, ரவுரி கிஷோர் மற்றும் கே பாவனா ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+