மாமியாரை தெருவில் வைத்து அடித்து துன்புறுத்திய மருமகள்...வைரல் வீடியோ...காரணம் இதுதான்!!

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஐதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாமியாரை வீட்டுக்கு வெளியே வைத்து அடித்து துன்புறுத்தி, அவரது ஆடைகளை மருமகள் உருவும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் இருக்கும் மல்லேபள்ளி என்ற இடத்தில் கடந்த 8ஆம் தேதி நடந்துள்ளது. அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் இந்த கொடூர சம்பவம் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

A woman being thrashed by her daughter-in-law and her mother in Hyderabad

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''55 வயது மாமியார் தஸ்நீம் சுல்தானாவை மருமகள் உஸ்மா பேகம் தொடர்ந்து அடிக்கிறார். முகத்தில் அறைகிறார். இதற்கு முன்னதாக மாமியார் தஸ்நீமை உஸ்மாவின் தாய் அஷிபா பேகம் அடித்துள்ளார். பின்னர்தான் மருமகளும் இணைந்து மாமியாரை அடித்துள்ளனர்'' என்றார்.

இந்த சம்பவம் அங்கு இருக்கும் சிசிவிடி கேமராவில் பதிவாகி இருக்கிறது. மேலும், அங்கு இருந்த சிறுவன் செல்போனில் பதிவு செய்துள்ளான். இந்த சம்பவத்தையடுத்து மருமகள் பேகம் மற்றும் அவரது தாய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A woman being thrashed by her daughter-in-law and her mother in Hyderabad

அடுக்குமாடி குடியிருப்பில் மாமியார், மருமகள் இருவரும் தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர். கீழ் வீட்டில் மாமியார் குடியிருந்துவருகிறார். மேல் மாடியில் இருக்கும் தனது மருமகளின் இல்லத்திற்கு செல்லும் தண்ணீரை மாமியார் நிறுத்தி இருக்கிறார். இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உஸ்மா பேகத்தின் கணவர் உபைத் அலி கான் சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். கடந்தாண்டுதான் இருவருக்கும் திருமணமாகி இருக்கிறது. போலீசார் தற்போது மாமியார், மருமகள் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் தனது கணவருடன் பேசுவதற்கு மற்றும் அவருடன் செல்வதற்கு மாமியார் அனுமதிப்பதில்லை என்று மருமகள் குற்றம்சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+