என் காரை நிறுத்துவியா.. காவலருக்கு பளார்.. சொகுசு காரில் ஸ்ரீலதா.. அடுத்து செய்தது தான் உச்சகட்டம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தன்னுடைய சொகுசு காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய இளம் பெண், அவரது போனை கீழே தூக்கி போட்டு நொறுக்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவுகிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெருநகரங்களில் உள்ள போலீஸ் என்றாலும் பொதுவாக வார இறுதிகளில் இரவு நேரங்களில் தீவிர சோதனை நடத்துவார்கள்.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா, அசுர வேகத்தில் பயணிக்கிறார்களா, கார்களில் கஞ்சா புகைத்தபடி பயணிக்கிறார்களா என்பதை தீவிரமாக சோதிப்பார்கள். சொகுசு கார்களில் பயணிப்பவர்கள் என்றாலும் சரி போலீசார் விட்டு விடமாட்டார்கள். யார், எந்த ஊர், என்ன செய்துவிட்டு வருகிறார்கள். எங்கு செல்கிறார்கள் என்பதை போலீசார் தீவிரமாக சோதிப்பார்கள்..

 A young woman attacked a traffic policeman who stopped her luxury car in Hyderabad


தினமும் சோதிப்பார்கள் என்றாலும் வார இறுதியில் சோதனையை தீவிரப்படுத்த காரணம், விபத்தில் யாரும் இறக்கக்கூடாது என்பது தான். மது போதையில் அல்லது கஞ்சா போதையில் சொகுசு காரில் அதிவேகமாக வந்து அப்பாவிகளின் வாகனங்கள் அல்லது நடந்து செல்வோர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் சோதனை சாவடி அமைத்து சோதிப்பார்கள். இந்த முறை சென்னை, கோவை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொச்சி,புனே, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கண்டிப்பாக இருக்கும்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அப்படி சோதனை செய்த போலீஸ்காரரை ஒரு இளம் பெண் தாக்கி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். ஹைதராபாத்தில் கடந்த பிப்வரி 24ம் தேதி இரவு 8 மணி அளவில் சொகுசு காரில் இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த இளம்பெண், தவறான பாதையில் (ஒருவழியில்) சென்றதாக போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ்காரரை தாக்கியதுடன், அவர் வீடியோ எடுத்ததற்காக போலீசின் போனை உடைத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் பெயர் ஸ்ரீலதா என்பதை போலீசார் விசாரணைக்கு பின் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோவில் இளம்பெண் ஸ்ரீலதா காரைவிட்டு ஆக்ரோஷமாக இறங்கியுள்ளார். அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல்படை வீரரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 'எல்லோரும் அந்த பாதையில்தான் செல்கிறார்கள். நான் தவறாக போகிறேனோ.. எனக்கும் தெரியும்’ என்று கத்தி பேசுகிறார்.

அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் சமாதானப்படுத்த முயன்ற நிலையில், அவர் உடனே கோபமாக காவலரிடம் சண்டை போட்டபடி பேசுகிறார். இந்த காட்சியை காவலர் செல்போனில் படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் காவலரை தாக்கியதுடன், அவரது செல்போனை பறித்து கீழே எறிந்து உடைத்தார், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அவர் ரகளையில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்திருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இளம்பெண் ஸ்ரீலதாவை கைது செய்தனர். இதனிடையே அந்த பெண் மது போதையில் இருந்தாரா என்பது தெரியவில்லை.. அதுபற்றி தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+