திரிஷா டூ சமந்தா வரை பாலோ செய்றாங்க.. விவாதமான நடிகர் அல்லு அர்ஜுனின் ‛பிரைவேட்’ இன்ஸ்டாகிராம் பதிவு
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் இன்ஸ்கிராமில் தனிப்பட்ட கணக்கை வைத்துள்ளதாகவும், அதனை நடிககைகள் சமந்தா, திரிஷா, நடிகர் ராணா உள்ளிட்டவர்கள் பின்தொடர்ந்து வருவதாகவும் ரெடிட் வலைதள பக்கத்தில் ஒருவர் கூறியுள்ளார். அதோடு அந்த பக்கத்தில் மீம்ஸ்களை தான் அதிகமாக பகிர்வதாகவும், குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைதுக்கு காரணமான புஷ்பா 2 கூட்ட நெரிசல் தொடர்பான மீமை அவர் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுவது விவாதமாகி உள்ளது.
தற்போது நாம் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகிறோம். அதேபோல் தான் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்காமலும் உள்ளனர்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் alluarjunonline என்ற பெயரில் கணக்கு பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் மொத்தம் 667 பதிவுகள் செய்துள்ளார். மொத்தம் 28.3 மில்லியன் பேர் அந்த கணக்கை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் தனிப்பட்ட முறையில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் ஒன்றை வைத்துள்ளதாக ரெடிட் பக்கத்தில் ஒருவர் கூறியுள்ளார். அதில், ‛‛நடிகர் அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பிரைவேட் அக்கவுண்ட் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். அதன் பெயர் @bunny_boy_Private என்பதாகும். அதன் பயோவில் private account to post random shit without thinking என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரோபைலில் அல்லு அர்ஜுனின் போட்டோ உள்ளது. இந்த அக்கவுண்ட்டை நடிகைகள் சமந்தா, திரிஷா மற்றும் அல்லு அர்ஜுனின் நெருங்கிய நண்பரான நடிகர் ராணா உள்ளிட்டவர்கள் பாலோ செய்கின்றனர்.
இதனால் நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு இதுதான். இந்த அக்கவுண்ட்டில் புஷ்பா 2 கூட்ட நெரிசல் தொடர்பான மீம்ஸ் உள்பட பல மீம்ஸ்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் சிறைக்கு சென்று வந்த பிறகு தன்னை பார்க்க வந்த ராணாவுடன் சேர்ந்து இருப்பது போன்ற மீமையும் பகிர்ந்துள்ளார். இதனை ஏற்கனவே ராணா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அதுவும் இங்கு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்த பக்கம் பற்றி நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.
இருப்பினும் ரெடிட் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த பதிவை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் உண்மை என்று நம்புகின்றனர். இன்று மாலை 4 மணி நிலவரப்படி அந்த பக்கத்துக்கு 320 பாலோவர்ஸ், 394 பேர் பாலோ செய்பவர்கள் இருந்தனர். மொத்தம் 1380 பதிவுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது தொடர்பான மீம் பகிர்ந்து இருப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
அதில் ஒருவர், ‛‛கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அல்லு அர்ஜுனின் தவறு இல்லை. இருப்பினும் அதுதொடர்பான மீமை பகிர்வது தவறு'' என்று கூறியுள்ளார். அதேவேளையில் இன்னொருவர், ‛‛அந்த மீம் என்பது கூட்ட நெரிசலுக்கு தொடர்புடையது இல்லை. அந்த மீம் என்பது ராணா மற்றும் அல்லு அர்ஜுன் இடையேயான நட்பை உணர்த்து வகையிலானது'' என்று கூறியுள்ளார். இப்படி ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பதிவு விவாதமாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications