கோவா வந்த நடிகை லட்சுமி மஞ்சு.. விமான ஊழியர்கள் மீது பரபரப்பு புகார்.. விசாரித்தால் ட்விஸ்ட்
ஹைதராபாத்: விமான நிலையங்களில் பயணிக்கும் போது, உடைமைகளை சோதனை செய்வது வழக்கமான நடைமுறையாகும். உடைமைகளை சோதனை செய்வதற்காகவே அங்கு மெட்டல் டிடெக்டர் இயந்திரங்கள் இருக்கின்றன. சிஆர்பிஎப் வீரர்களும் பயணிகளை தனிப்பட்ட முறையில் சோதனை செய்வார்கள். அதேபோல் சந்தேகம் இருந்தால் கைப்பையை விமான நிறுவன ஊழியர்களும் சோதிப்பார்கள். அப்படி கோவா விமான நிலையத்தில் நடந்த சோதனை குறித்து தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவா விமான நிலையத்தில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவின் கைப்பையை வலுக்கட்டாயமாக வாங்கியதால், அவர் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மீது துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தினார். பொதுவாகவே செக்-இன் பொருட்களை எடுத்து செல்லும் போது தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதில் கடுமையான விதிமுறைகள் இருக்கும் நிலையில், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால் பொருட்கள் தடுத்து வைக்கப்பட்டதாக விமான நிறுவனம் அதற்கு உடனடியாக விளக்கம் அளித்தது.

அண்மையில் கோவா சென்ற தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு, கோவா விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தன்னை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டினார். இதுகுறித்து நடிகை லட்சுமி மஞ்சு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இண்டிகோ விமான நிறுவன பணியாளர்கள் எனது கைப்பையயை வலுக்கட்டயமாக பிடுங்கி திறக்க முயன்றனர். அதை திறக்காவிட்டால் பையை கோவாவிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அவர்களின் என்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். யாராவது உதவுங்கள்.. இது மிகவும் அபத்தமானது..
இண்டிக்கோவில் இது ஒரு தொல்லை, ஏன்னா அவங்க என் கண் முன்னே ஒரு பாதுகாப்பு டேக் கூட வைக்கவில்லை.. ஏதாவது விடுபட்டா, அவங்க அப்படித்தான் செய்வாங்கன்னு வற்புறுத்தியும், இண்டிகோ எந்தப் பொறுப்பையும் ஏற்குமான்னு எனக்கு சந்தேகம். இப்படி ஒரு விமான நிறுவனத்தை நடத்துறது எப்படி சாத்தியம்.." என்று எழுதியிருந்தார். மேலும் இண்டிகோ விமான நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார்.
தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவின் புகாருக்கு விளக்கம் அளித்த இண்டிகோ விமான நிறுவனம், "மேடம், இன்று(நேற்று) காலை நீங்கள் அனுபவித்த சிரமத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் எங்களுக்கு வந்த அறிவுறுத்தல்களின்படி, தடைசெய்யப்பட்ட பொருட்களை செக்-இன் சாமான்களுடன் எடுத்துச் செல்வதில் கடுமையான விதிமுறைகள் இருக்கிறது. அதனால் தான், உங்கள் செக்-இன் பை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தீர்வை ஏற்படுத்துவதில் எங்கள் விமான நிறுவனக் குழு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம், பையை செக்-இன் செய்ய அனுமதிப்பதை உறுதி செய்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் உங்களுக்கு ஒரு இனிமையான விமானப் பயணத்தை வாழ்த்துகிறோம்" என்று கூறியிருந்தது.
அதேநேரம் இண்டிகோ விமான நிறுவனம் இன்னொரு பதிவில், "யக்ஷினி பட நடிகை தனது பையை விமான நிலைய ஊழியர்கள் பிடுங்கிக் கொண்டதாக கூறுகிறார்கள். அவர்கள் சோதனைக்காகவே வாங்கினார்கள். அவர் அதை திறக்க அனுமதிக்கவில்லை." என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது. தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லாமல் இருக்க கடுமையான சோதனைகள் செய்யப்படுவது வழக்கமானது என்றும். அதற்காகவே நடிகையின் பையை ஊழியர்கள் தடுத்து வைத்ததாக நிறுவனம் தெளிவுப்படுத்தியது. இதையடுத்து சில மணி நேரங்களுக்குப் பின்பு, சோதனை முடிக்கப்பட்ட உடைமைகள் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை, "எனது வழக்கை முடித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications