Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிச்சி பிச்சி உதறிட்டாங்களே நடிகை ரோஜா.. "அவர்" பேரை சொன்னதுமே, "ஆ"ன்னு வாயை பிளந்த ஆந்திரா.. பலே பலே

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை ரோஜாவின் ஆக்ரோஷ பேச்சின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து, சந்திரபாபு நாயுடு தரப்பினர் கடுப்பாகி உள்ளனர்.

நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர். சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென அரசியலிலும் என்ட்ரி தந்தார்.. ஆந்திர அரசியலில் "ஃபயர் பிராண்ட்" என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா..

Actress Minister Rojas fantastic speech and YSR will win 175 constituencies in Andhra Assembly elections

சினிமா சான்ஸ்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல அதிரடிகளை செய்தவர்.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா.. இவரது அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே தொகுதி மக்களால் பெரிதும் பேசப்பட்டதால், அமைச்சர் பதவியும் தானாகவே இவரை தேடி வந்தது... சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்...

எனவே, சுற்றுலா, கலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆந்திர மாநில அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும்போதெல்லாம், மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து கலகலப்பாகி விடுவார் ரோஜா..

டான்ஸ் ஆடிய ரோஜா: மாணவிகள் மேடையில் நடனமாடி கொண்டிருந்தால், அவர்களுடன் சேர்ந்து ரோஜாவும் டான்ஸ் ஆடுவார்.. கபடி விளையாடினால், அவர்களுடன் சேர்ந்து ரோஜாவும் கபடி விளையாடுவார்.. அரசியலில் இறங்கினாலும், அமைச்சராகவே பதவிவகித்தாலும், மாணவிகளுடன் சகஜமாக ஆடிய நடனம், காண்போரை வியக்க வைத்து வருகிறது..
ரோஜா ரோஜா: பொதுவாக, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறையானது, அந்த அளவுக்கு பிரபலமானது கிடையாது.. இதன்காரணமாகவே, சுற்றுலா துறை அமைச்சர்கள் பற்றின செயல்பாடும், செய்திகளும் மக்களை பெரும்பாலும் சென்றடைவதும் இல்லை.. ஆனால், ரோஜா இந்த பொறுப்புக்கு வந்தபிறகு, சுற்றுலா துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது..

இயல்பாகவே கலாரசனையும், கலகலப்பு குணமும் கொண்ட ரோஜாவுக்கு, இந்த துறை மிக பொருத்தமாகவே அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.. எந்தவித பந்தாவும், கெடுபிடியும் இல்லாமல், சகஜமாக பழகும் அவரது இயல்பான குணமும், இதற்கு பேருதவியாக திகழ்ந்து வருகிறது.. அந்தவகையில், சுற்றுலா மற்றும் கலைகளை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும், அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே வருகிறார் நடிகை ரோஜா செல்வமணி..!

இப்போது விரைவில் ஆந்திராவில் தேர்தல் வரப்போகிறது.. சந்திரபாபு நாயுடு பிஸியாக களப்பணியில் இறங்கிவிட்டார்.. இப்படிப்பட்ட சூழலில், வரப்போகும் தேர்தல் குறித்தும், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி குறித்தும் புகழ்ந்து தள்ளி விட்டார் ரோஜா.

சந்திரபாபு நாயுடு: நேற்று நடந்த விழாவில் ரோஜா பேசும்போது, "எங்கள் ஆட்சியில் தொழிலதிபர்களுடன் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்ததாக தொழிலாளர்கள், டிரைவர்களுடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொண்டார். சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மதுபான ஆலை தொழிலில் தான் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து பெரிய தொழிலதிபர்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய வரிசையில் நிற்கிறார்கள். அதன் மூலம் ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இதனால், மாநிலம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

பிராண்ட்: ஆனால், சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.. மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி நடப்பதை பார்த்து எல்லாருமே பாராட்டுகிறார்கள்.. "ஒய்எஸ் ஜெகன்" என்பது வெறும் பெயர் கிடையாது.. அது ஒரு பிராண்ட்... அடுத்த வருடம் ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 175 தொகுதிகளில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.. இதற்காக மக்கள் இப்போதே தயார் நிலையில் இருக்கிறார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+