ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரும் பேசாம டெல்லியை பாலோ பண்ணுங்க.. சொல்கிறார் அமைச்சர் ரெட்டி!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா ஒழிப்பில் அனைத்து மாநிலங்களும் டெல்லியை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

கொரோனாவிடம் சிக்கித் திண்டாடிய முக்கிய மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. டெல்லி மக்களை மிகப் பெரிய அளவில் பயமுறுத்திய கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி மாநில அரசும், மத்திய அரசும் தீவிரமாக போராடி வருகின்றன. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. மேலும் மக்களின் ஒத்துழைப்பும் தற்போது சிறப்பாக இருப்பதால் கொரோனாவின் வீரியம் அங்கு குறையத் தொடங்கியுள்ளது.

all states and uts should follow delhi model, says union minister

இதுதொடர்பாகத்தான் தற்போது ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ரெட்டி. ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கானா மாநிலம் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனை, டிரேசிங், சிகிச்சை ஆகிய மூன்றையும் தீவிரமாக செய்தால்தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால் சிரமம்.

அதிக அளவில் சோதனை செய்து தனிமைப்படுத்துவதன் மூலமும், தொடர்புள்ளோரை கண்டறிவதன் மூலமும் பரவலை நாம் குறைக்க முடியும். டெல்லியை இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். டெல்லியில் உள்ள நிலவரத்தை நேரடியாக நான் கண்காணித்து வருகிறேன். அங்கு தற்போது குணமடைவோர் எண்ணிக்கை 84 சதவீதமாக அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களும் டெல்லியை பின்பற்ற வேண்டும்.

all states and uts should follow delhi model, says union minister

டெல்லியில் மக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளனர். தேவையில்லாமல் யாரும் வெளியில் வருவதில்லை. அனைத்து மாநில மக்களும் இதைச் செய்ய முன்வந்தால் விரைவிலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். அறிகுறிகள் இல்லாமல் இருப்போர் வீட்டுத் தனிமையில் கட்டாயம் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்றார் ரெட்டி.

பெரும் சப்தத்துடன் அப்படியே விழுந்த கிரேன்.. 10 பேர் பலி.. விசாகப்பட்டினம் கப்பல்தளத்தில் விபரீதம்!பெரும் சப்தத்துடன் அப்படியே விழுந்த கிரேன்.. 10 பேர் பலி.. விசாகப்பட்டினம் கப்பல்தளத்தில் விபரீதம்!

டெல்லி மட்டுமில்லை, தமிழ்நாடும் கூட கொரோனா தடுப்புப் பணிகளில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. எனவே தமிழகத்தையும் கூட பிற மாநிலங்கள் தாராளமாக பின்பற்றலாம்.

English summary
Union minister of state for Home kishan Reddy has said that all states and uts should follow Delhi model to beat corona virus spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X