மதுபோதை+ செல்போன்+ பேருந்து பேட்டரி.. ஆந்திர பஸ் விபத்தில் உயிரிழந்த 20 பேர்.. உண்மையில் என்ன காரணம்
ஹைதராபாத்: பெங்களூர் நோக்கிச் சென்ற பேருந்து ஆந்திராவில் வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த ஆந்திரா பேருந்து விபத்து குறித்து விசாரணையில் சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்தில் பெங்களூர் சென்ற பேருந்து ஒன்று நேற்று ஆந்திராவில் விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சில புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது பேருந்தில் அதிக எண்ணிக்கையில் செல்போன் எடுத்துச் செல்லப்பட்டதாம். பேட்டரியுடன் சேர்த்து அந்த செல்போன்களும் தீ விபத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியதாக அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டது.

20 பேர் உயிரிழப்பு
வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தக் கொடூர விபத்து அரங்கேறியது. அதிவேகமாக வந்த டூவீலர், எதிரில் வந்த பேருந்தின் அடியில் சிக்கியது. இதனால் இருசக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க் வெடித்துத் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 19 பேருந்து பயணிகள், இருசக்கர வாகன ஓட்டுநர் என மொத்தம் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டூவீலரில் வந்த நபர் குடிபோதையில் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்தப் பேருந்தில் சுமார் ₹46 லட்சம் மதிப்புள்ள 234 ஸ்மார்ட்போன்கள் இருந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்ட உடன் உருவான வெப்பத்தால்.. இந்தச் சாதனங்களில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரி வெடித்துள்ளது. தீ வேகமாகப் பரவ இதுவும் ஒரு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு சேர்த்து பேருந்தின் பேட்டரி வெடித்ததும் நிலைமை மோசமாக்கியுள்ளது.
முதற்கட்ட விசாரணை
ஆரம்பக்கட்ட விசாரணையில், பேருந்தின் முன்புறத்தில் ஏற்பட்ட டீசல் கசிவும், இருசக்கர வாகனம் சிக்கியதால் ஏற்பட்ட தீப்பொறியும் தான் இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.. அதாவது டூவீலர் அடியில் சிக்கிய நிலையில், அப்போது தீப்பொறி உருவாகி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் பேருந்தின் தரைப்பகுதி உருகி, சேதத்தை மேலும் அதிகரித்ததாகக் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக கர்னூல் சரக துணை ஆய்வாளர் ஜெனரல் (DIG) கோயா பிரவீன் கூறுகையில், "டூவிலர் பஸ்ஸின் முன்புற டையருக்கு அடியில் சிக்கியுள்ளது. அது வெடித்துச் சிதறிய நிலையில், முக்கிய வெளியேறும் வழியில் தீ விபத்து ஏற்பட்டது.. சரியாக அங்கு தான் பேருந்தின் 12 KV பேட்டரி இருந்துள்ளது. டூவீலரில் இருந்து ஏற்பட்ட தீ விபத்தால் உருவான வெப்பத்தில் அந்த பேட்டரிகளும் வெடித்துள்ளது.
என்ன நடந்தது
அதாவது இரு இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது. முதலில் இருசக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க்.. அடுத்து அதன் வெப்பத்தால் பேருந்தின் பேட்டரியிலும் தீ ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் பயன்படுத்தப்பட்ட எளிதாக எரியக்கூடிய பொருட்கள் தீ விபத்தை மேலும் மோசமாக்கியது" என்றார்.
இந்தப் பேருந்தில் 44 பயணிகள் இருந்த நிலையில், அதில் 25 பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். பேருந்தை ஒட்டி வைந்த மிரியாலா லக்ஷ்மையா (42), விபத்து ஏற்பட்டவுடன் நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகிறார்கள். தீ விபத்திலிருந்து தப்பிய லக்ஷ்மையா, பேருந்தின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையில் உள்ள லக்கேஜ் ரேக்கில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு ஓட்டுநரான சிவ நாராயணாவை எழுப்பினார்.
டிரைவர்கள்
பஸ்ஸுக்கு நுழைய முடியாது என்பதை உணர்ந்த லக்ஷ்மையாவும், நாராயணாவும் டயர் மாற்றப் பயன்படுத்தப்படும் கம்பியால் பேருந்து கண்ணாடிகளை உடைத்து, சில பயணிகள் தப்பிக்க உதவியுள்ளனர் அதேபோல விபத்தைப் பார்த்த பொதுமக்களும் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் வெளியே வர உதவியுள்ளனர். உள்ளே இருந்து பயணிகளும் கூட சிலர் கண்ணாடிகளை உடைத்துத் தப்பியுள்ளனர்.
தீ வேகமாகப் பரவியதால் பயந்துபோன லக்ஷ்மையா சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். அதன் பிறகு நாராயணா தான் அங்கிருந்து பலரும் தப்பிக்க உதவியிருக்கிறார். இப்போது லக்ஷ்மையா மற்றும் நாராயணாவை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் லக்ஷ்மையா மீது சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications