மிஸ் யூ சார்.. ராமோஜி ராவ் உடலை சுமந்து சென்ற சந்திரபாபு நாயுடு.. கண்ணீருடன் சிரஞ்சீவி..சோகமாக பவன்
ஹைதராபாத்: பிரபலமான ஈ நாடு ஊடகத்தின் நிறுவனரும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜிராவ் நேற்று காலமானார். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு அவரது உடலை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தார்.
ஈ டிவி பாரத் உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்களை அடக்கிய ஈ நாடு ஊடக நிறுவனரும், பெரும் தொழிலதிபருமான ராமோஜிராவ் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையிலும் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான ராமோஜிராவ் பிலிம் சிட்டியை நிறுவிய இவர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டிருந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் இந்த ஃபிலிம் சிட்டியில் தான் தமிழிலும் தெலுங்கிலும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள் திரையில் உள்ளிட்ட பலருடன் இணக்கமாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என தெலுங்கானா ரேவந்த் ரெட்டி அறிவித்தார். ராமோஜிராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் இன்று ராமோஜிராவின் உடல் அடக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ,பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக இறுதி சடங்கில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு ராமோஜி ராவின் உடலை தானே சுமந்து சென்று சுற்றி வந்து அடக்கம் செய்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications