ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

13 + 13.. "ஜெகன்காரு" சபாஷ்.. மக்கள் ஹீரோவின் அடுத்த அதிரடி.. ஆந்திர மக்களுக்கு ஒரு நற்செய்தி..!

ஆந்திர மாநிலத்துக்கு மேலும் 13 மாவட்டங்கள் உதயமாகின்றன

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில், மாவட்டத்துக்கு ஒரு ஏர்போர்ட் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விமான நிலையம் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், மேலும் 13 மாவட்டங்கள் உதயமாக போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019-ல் ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது... ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார்..

இலங்கை கொள்ளையர்கள் தொடர் தாக்குதல்- 4 தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு!இலங்கை கொள்ளையர்கள் தொடர் தாக்குதல்- 4 தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு!

அவர் என்றைக்கு ஆட்சிக்கு வந்தாரோ, அன்றைய தினத்திலிருந்தே பல்வேறு வகையான புதிய திட்டங்களை அந்த மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறார்..

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஜெகனின் சில முக்கியமான அறிவிப்புகள் ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களிலும் உற்றுநோக்கப்பட்டன.. எந்த அறிவிப்பு அவர் வெளியிட்டாலும், அது அம்மாநில மக்களின் நலனை முன்னிறுத்தியே உள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.. சமீபத்தில்கூட, ஒரு மாவட்டத்துக்கு ஒருஏர்போர்ட் கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளார்.

 புது அறிவிப்பு

புது அறிவிப்பு

இந்நிலையில், மற்றொரு அதிரடியை அறிவிக்க போகிறாராம் ஜெகன்.. ஆந்திர மாநிலத்தில் இப்போதைக்கு சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் விசாகப்பட்டினம் உட்பட 13 மாவட்டங்கள் இருக்கின்றன... இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதால், இவைகளுக்கான மாவட்ட தலைநகரங்கள் அதிக தூரத்தில் இருக்கின்றன.. இது பொதுமக்களுக்கு நடைமுறை சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.. தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க சிரமம் மேற்கொள்வதாக கூறிவருகின்றனர்.

 ஜெகன் மோகன் அதிரடி

ஜெகன் மோகன் அதிரடி

அதனால், பொதுமக்கள் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் அந்த மாவட்டங்களை, இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் பல வருடங்களாகவே விடுக்கப்பட்டு வருகின்றன... எனவே ஜெகன்மோகன் ரெட்டியும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்த 13 மாவட்டங்களையும் பிரிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தநிலையில், அதற்கான வரைபடங்கள் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள்..

 மேலும் 13 மாவட்டங்கள்

மேலும் 13 மாவட்டங்கள்


இந்த 13 மாவட்டங்களில் இருந்து, மேலும் புதிதாக 13 மாவட்டங்கள் அதில் இருந்து பிரிக்க போகிறார்கள்.. அதாவது மேலும் 13 மாவட்டங்கள் அந்த மாநிலத்தில் உதயமாகி, மொத்தம் 26 மாவட்டங்களாக நடைமுறைக்கு வரப்போகின்றன. உதாரணத்துக்கு சித்தூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, சித்தூர் மாவட்டம் தனியாகவும், பாலாஜி என்ற மாவட்டம் தனியாகவும் பிரிய போகின்றன..

சித்தூர்

சித்தூர்

சித்தூருக்கு சித்தூர் தலைமையிடமாக இருக்கும்.. பாலாஜி மாவட்டத்துக்கு திருப்பதி தலைமையிடமாக இருக்கும் என்கிறார்கள்.. அதுபோலவே, ஒவ்வொரு மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு, அதற்கான தலைமையகங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதேபோல் அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம், சத்திய சாயி எனவும், கடப்பா மாவட்டம் ஒய்எஸ்ஆர் கடப்பா, அன்னமய்யா மாவட்டம் எனவும், நெல்லூர் மாவட்டம் நெல்லூர், பொட்டி ஸ்ரீராமுலு மாவட்டமாக பிரிக்கப்படுகிறது..

 அறிவிப்பு

அறிவிப்பு

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு அன்று நடைபெறலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்... இதனால் அம்மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஜெகன் மோகன் தீர்த்து வைப்பதால், இந்த அறிவிப்புகள் அனைத்துமே வரப்போகும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே கணிக்கப்படுகிறது..

English summary
Andhra pradesh gets 13 another new districts in state takes total to 26 districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X