Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000.. சந்திரபாபு நாயுடு எடுத்த மேஜர் முடிவு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரு குடும்பத்தில் பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வருடத்திற்கு 15 ஆயிரம் அளிக்கப்படும். 'தல்லிகி வந்தனம்' திட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். கடந்த வருடம் ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை சந்திரபாபு நாயுடு அறிவித்து வருகிறார்.

andhra-pradesh-launches-rs-15-000-annual-aid-scheme-for-each-school-students

அந்த வகையில், ஒரு குடும்பத்தில் பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தேர்தலின் போது சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்த வாக்குறுதிகளில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டமும் ஒன்றாக இருந்தது.

தற்போது சந்திரபாபு நாயுடு அரசு அமைத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், 'தல்லிகி வந்தனம்' என்ற பெயரில் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளர். இதன் அர்த்தம் என்னவென்றால் அம்மாவுக்கு வணக்கம் என்பதாகும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வருடத்திற்கு 15 ஆயிரம் அளிக்கப்படும். இது குறித்து ஆந்திர அரசு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:-

'தல்லிகி வந்தனம்' திட்டத்தின் படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டுக்காக அந்த தொகையில் ரூ.2 ஆயிரம் கழித்துக் கொள்ளப்படும். மீதம் உள்ள தொகை, அந்த குழந்தையின் அம்மா அல்லது பாதுகாவலரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு செல்பவர்களாக இருந்தாலும் தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் இந்த தொகை அளிக்கப்படும். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறாத பள்ளிகள், ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பலன் அடைய தகுதி உடையவர்கள். 67 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களும், 43 லட்சத்துக்கு மேற்பட்ட அம்மாக்களும் தல்லிகி வந்தனம் திட்டத்தால் பலன் அடைவார்கள்..

வரும் 12 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து, நிதியுதவி விடுவிக்கப்படும். மக்கள் தொகையை அதிகப்படுத்துவதில் ஆந்திர அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், அதிக குழந்தைகளை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகவும் இது அமைந்துள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+