சீட்டில் யாரு? அவங்களா.. துணிவு படம் ஓடிய தியேட்டரில் லைட் அடித்து பார்த்தால்! அட அந்த லேடி எம்எல்ஏ?
ஹைதராபாத்: துணிவு படம் ஓடும் தியேட்டர் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார், நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் இயக்குனர் அ வினோத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் துணிவு. 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான கலெக்சனுடன் இந்த படம் ஹிட் அடித்துள்ளது.
வங்கியில் நடக்கும் கொள்ளை, வங்கிகள் நடத்தும் கொள்ளை, பைனான்ஸ் கிரைம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, மெசேஜ் சொல்லும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

முதல் பாதி
முக்கியமாக படத்தின் முதல் பாதி வில்லனாதனமாக இருக்கிறது. அஜித் மிரட்டி இருக்கிறார் என்று பாராட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக இருக்கிறது. படத்தில் எதிர்த்த காட்சிகள் இல்லை. கதை எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை. திரைக்கதை சொதப்பிவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் துணிவு படம் ஓடும் தியேட்டர் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

என்ன நடந்தது
நேற்று துணிவு படம் ஆந்திர மாநிலம் நகரியில் இருக்கும் SJ CINEMAS தியேட்டரில் ஒளிபபரப்பப்பட்டது. அங்கு மாலைக்காட்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது திடீரென ஆடியன்ஸ் பகுதியில் இருந்து சத்தம் கேட்டது. எதோ பிரபலம் வந்தது போல சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கே பலரும் லைட்டை அடித்து பார்த்து உள்ளனர். அப்போதுதான் அங்கே அமர்ந்து இருந்தது ஆந்திர பிரதேச எம்எல்ஏ ரோஜா செல்வமணி என்று தெரிய வந்தது. சினிமாவிற்கு பொதுவாக செல்லாத நடிகை ரோஜா.. ஆந்திர படங்களுக்கு இடையே தமிழ் படமான துணிவை பார்க்க வந்தது கவனம் பெற்றது.

ரோஜா
இதையடுத்து நடிகை எம்எல்ஏ ரோஜாவுடன் மக்கள் பலரும் போட்டோ எடுத்துக்கொண்டனர். இவர் தியேட்டரில் படம் பார்த்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எம்எல்ஏ ரோஜா, அரசியல்வாதியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தீவிரமாக பல படங்களில் நடித்தவர். முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் தமிழில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. அதன்பின் அரசியலில் குதித்தனர் 1998ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் 2011ல் இணைந்தார். 2014ல் முதல்முறையாக நகரி தொகுதியில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக தேர்வானார்.

யார் இவர்?
பின்னர் மீண்டும் 2019ல் அதே தொகுதியில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். 2022 வரை இவர் சினிமாவில் சில சில படங்களில் நடித்து வந்தார். முக்கியமாக தெலுங்கு படங்களில் அவ்வப்போது சில ரோல்களை செய்து வந்தார். ஆனால் 2022 பாதியில் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகுவதாக அறிவித்தார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் துணிவு படத்தை பார்க்க திடீரென அவர் தியேட்டருக்கு வந்தது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications