ஆறு பெண்களின் இதயத்தை ஹேக் செய்த ப்ளேபாய்.. அடித்து துவைத்து காலில் விழவைத்த ஏழாவது மனைவி!
ஹைதராபாத்: 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, சொத்துகளை அபகரித்த ஆந்திர காதல் மன்னனை, அடித்து உதைத்து காலில் விழவைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் 7 வது மனைவி.
ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதாக காட்டிய படம் நான் அவன் இல்லை என்ற தமிழ் திரைப்படம்.
ஆனால் உண்மையில் இன்றைய சூழலில் ஒரு பெண்ணை கல்யாணம் செய்வதே இளைஞர்களுக்கு பெரும் கனவாக உள்ளது. ஏனெனில் யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் பெண் கிடைப்பது இல்லை

திருமணம் ஆகவில்லை
30 வயதை கடந்து எண்ணற்ற இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்குமா என்று தேடி திரிகிறார்கள். ஆனால் 20களில் உள்ள பெண்களில் பலர் காதல் திருமணத்தை விரும்புகிறார்கள். அதிலும் காதல் வலைகளில் இருந்து தப்பும் பெண்கள்,நல்ல படித்த, வசதியான, திறமையான, செட்டில் ஆன என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். இதில் தவறுகள் இல்லை என்றாலும் எதார்த்தம் என்பது இன்றைய இளைஞர்கள் செட்டில் ஆன பின்னர் கல்யாணம் முடிப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது.

சூறையாடிய இளைஞர்கள்
இந்த சூழலில் ஐடி துறையில் பணியாற்றும் பெண்களை குறிவைத்து கல்யாணம் என்ற பெயரில் அவர்களை வேட்டையாடி, நகை பணத்தை அபேஸ் செய்து வந்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

பணம் நகை அபேஸ்
விஜய பாஸ்கர் என்ற பெயரில் சாப்ட்வேர் என்ஜினியர் என்று பதிவிட்டு பெண்களுக்கு காதல் வலை விரிக்கிறார். இதுவரை இவரது வலையில் 7 பெண்கள் விழுந்துள்ளார்கள். அவர்களின் வங்கி கணக்கையும், இன்னும் பிற உடமைகளையும் காதலித்தே அழித்திருக்கிறார்.

ஏழரையில் சிக்கினார்
ஆறு பெண்களின் இதயத்தை ஹேக் செய்து சிக்காத இந்த காதல் மன்னன், ஏழாவதாக ஒரு பெண்ணின் மனதை ஹேக் செய்த போது, வலுவிழந்து வசமாக சிக்கியிருக்கிறார். 2017ம் ஆண்டு சௌஜன்யா என்பவருடன் விஜயபாஸ்கருக்கு காதல் திருமணம் நடந்துள்ளது, காதலித்த காலத்தில் இருந்தே சௌஜன்யாவின் சொத்துக்களை தான் விரும்பியிருக்கிறார் விஜயபாஸ்கர். காதலித்த பாவத்திற்காக கழுத்தை நீட்டியிருக்கிறார். திருமணம் ஆன பின்னரும் திருந்தவில்லை விஜயபாஸ்கர். இதனால் அவரை விட்டு சிறிது காலம் விலகியிருந்தால் சரியாக இருக்கும் என்று விலகி இருக்கிறார் சௌஜன்யா.

அடித்து துவைத்த மனைவி
ஆனால் விஜயபாஸ்கரோ, மீண்டும் பெண்களுடன் காதல் நாடகம் ஆடத்தொடங்கி இருக்கிறார். இதனிடையே ஒட்டுமொத்தமாக ஆறு பெண்களை திருமணம் செய்து அவர்களை சீரழித்து நகை பணத்தை அபேஸ் செய்ததை ஒரு கட்டத்தில் அறிந்திருக்கிறார் சௌஜன்யா, தன்னை ஏமாற்றிய கணவன் விஜயபாஸ்கரை, உறவினர்களுடன் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அத்துடன் காலில் விழவைத்து பின்னர், கணவனின் வண்டவாளங்களை பட்டியலிட்டு அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications