திமுகவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஓவைசி.. தேர்தல் நெருங்கும் நிலையில் சொன்ன முக்கிய மேட்டர்
ஹைதராபாத்: தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அசாதுதீன் ஓவைசி வீடியோ வெளியிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
முன்னதாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய ஓவைசி, ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

திமுகவுக்கு ஆதரவாக தலைவர்கள்
திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது குறித்து பேசிய கெஜ்ரிவால், "டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். அந்த கசப்பான அனுபவங்களை நான் இங்குள்ள மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்.
ஸ்டாலின் எனது நண்பர், எனது சகோதரரை போன்றவர். இருப்பினும் நான் அவருக்காக பிரச்சாரம் செய்ய வந்திருக்க காரணம், அவர் தமிழ்நாட்டிற்கு செய்திருக்கும் பணிகள்தான்" என்று கூறியிருந்தார்.
அதேபோல கடந்த 18ம் தேதி தொடங்கி ராகுல் காந்தியும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படியாக திமுகவுக்காக பல முக்கிய தலைகள் பிரச்சாரத்தில் குதித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஓவைசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications