பாஜக வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம்.. ஹைதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஓவைசி வெற்றி!
ஹைதராபாத்: தெலங்கானாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி அசாதுதீன் ஓவைசி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மாநில அரசை பொறுத்த வரை காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக உள்ளது. எனவே லோக்சபா தேர்தலிலும் இதன் ஓங்குமா? அல்லது பாஜக போட்டி கொடுக்குமா? முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி முன்னிலை பெறுமா? என்கிற கேள்வி எழுந்திருந்தது.
இன்று காலை முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில், காங்கிரசும், பாஜகவும் சரிபாதி தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன. மீதமிருந்த ஒரு தொகுதியில் ஓவைசி முன்னிலையில் இருந்தார். அப்போதிலிருந்து பிஆர்எஸ் கட்சியை பார்க்க முடியவில்லை.
தற்போது நிலவரப்படி காங்கிரசும், பாஜகவும் தலா 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதியான ஹைதராபாத்தில் அசாதுதீன் ஓவைசி வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மாதவி லதா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, பெத்தபள்ளே, நல்கொண்டா, போங்கிர், வரங்கல், கம்மம், ஜாகீராபாத், நாகர்கர்னூல், மெகபூபாபாத் ஆகிய தொகுதிகளையும், பாஜக அதிலாபாத், கரீம்நகர், மேடக், மல்காஜ்கிரி, செகந்தராபாத், செவெல்லா, மெகபூபாநகர் என 8 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications