ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் உங்க கலாச்சாரமா? பிரதமரின் பெருந்தன்மையை மறந்துவிட்டீர்களா? சந்திரசேகர ராவை விமர்சித்த பாஜக

Google Oneindia Tamil News

ஐதராபாத்: ராமானுஜரின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்காத நிலையில் இது நெறிமுறை மீறல் என விமர்சித்துள்ள பாஜக தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார், இதுதான் உங்கள் கலாச்சாரமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வைணவ ஆச்சாரியரான இராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார். சமத்துவத்துக்காக சிலை என்று பெயரிடப்பட்டுள்ள இச்சிலையா முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடைகளின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 216 அடி உயரத்தில் 1550 டன் ஐம்பொன் மற்றும் 120 கிலோ தங்கம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதோடு, தாமரை மலர்மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் வகையில் இந்த சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

பிஇ பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிக்கும் வேலைகள்! பிஇ பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிக்கும் வேலைகள்!

பிரதமர் மோடி வருகை

பிரதமர் மோடி வருகை

முன்னதாக பிற்பகல் ஐதராபாத் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்பளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியை முதல்வர் சந்திரசேகரராவ் பங்கேற்காத நிலையில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒருமுறை கூட சந்திரசேகர ராவ் வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெறிமுறை மீறல்

நெறிமுறை மீறல்

இது நெறிமுறை மீறல் என விமர்சித்துள்ள பாஜக தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார், இதுதான் உங்கள் கலாச்சாரமா என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் இன்றுவரை பிரதமர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சந்திரசேகரராவ் பங்கேற்க வில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க முதல்வர் வன்மையாக கண்டிப்பதாகவும், 80 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறும் நீங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது இதுதானா எனவும் இது தான் உங்கள் கலாச்சாரம் எனவும் கேள்வி எழுப்பினார்.

பிரதமரின் பெருந்தன்மை

பிரதமரின் பெருந்தன்மை

பிரதமரை அவமதிப்பது நாட்டு மக்களை அவமதிப்பது போன்றது என்று கூறிய அவர், பிரதமரின் பெருந்தன்மையை மறந்துவிட்டீர்களா? மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமரை வரவேற்கும் அடிப்படை மரியாதை இல்லாமல், உங்கள் பண்ணை வீட்டில் உங்களை எப்படி அடைத்துக்கொள்வீர்கள் என்றும் பண்டி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி ஹைதராபாத்தில் இருக்கும் போது கேசிஆர் துரோகம் செய்து, பின்னர் நொண்டி சாக்குகளை கூறி ஏமாற்றுவது வெட்கக்கேடானது என்றும் பாண்டி சஞ்சய் குமார் பேசினார்.

இழிவான துஷ்பிரயோகம்

இழிவான துஷ்பிரயோகம்

பிரதமர் மீதான ராவின் இழிவான துஷ்பிரயோகங்களை ஒட்டுமொத்த நாடும் வெறுத்து வரும் நிலையில், பிரதமருக்கு தனது முகத்தைக் காட்ட முதல்வர் விரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். கடந்த பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சாமானியர்களை ஏமாற்றிய 'கோல்மால் பட்ஜெட்' என்றும், பிரதமர் மோடியை "குறுகிய பார்வையற்ற பிரதமர்" என்று விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP Telangana state president Pandi Sanjay Kumar has criticized Telangana Chief Minister Chandrasekara Rao for not welcoming Prime Minister Narendra Modi to Hyderabad, saying it was a breach of protocol and questioned whether this was your culture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X