Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதா? தெலங்கானா தேர்தலில் பின்வாங்கும் பாஜக? கேசிஆருக்கு ஆதரவளிக்க வாய்ப்பாமே

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு என பல கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. இது பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தடுக்க பாஜக மெகாபிளானை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலங்கானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. தற்போது அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் உள்ளார்.

BJP made a plan to prevent congress victory in Telangana? what if hung assembly happens may support to BRS

இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தெலங்கானாவை பொறுத்தமட்டில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சிக்கு 60 எம்எல்ஏக்கள் வேண்டும். 2014ல் தெலங்கானா ஆந்திராவில் இருந்து புதிய மாநிலமாக உதயமான நிலையில் 2 முறை சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இதில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்று முதல்வராக சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.

மாறாக இந்த தேர்தலில் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதேபோல் பாஜகவும் தனது செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால் வடமாநிலங்களை போல் தென்மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. கர்நாடகாவை தவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக கால்பதிக்க துடித்தாலும் கூட அதற்கு இதுவரை எந்த பலனும் இல்லை. இதற்கிடையே தான் தெலங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த கருத்து கணிப்புகளில் தெலங்கானாவை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பிஆர்எஸ் கட்சிகள் இடையே தான் போட்டி இருக்கும். இந்த 2 கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. மாறாக பாஜக சீனிலேயே இல்லை என கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. அதாவது தெலங்கானா சட்டசபை தேர்தலில் பாஜக ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெறும் என பல கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் என்பது பாஜக தரப்பை அப்செட்டாக்கி உள்ளது. ஏனென்றால் பாஜக தெலங்கனாாவில் பாஜக எழுச்சி பெற்றுள்ளதாக அந்த கட்சி நம்பியது. அதாவது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக எழுச்சி பெற்றது. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் கூட இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட் கிடைக்கும் எனக்கூறும் கருத்து கணிப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேவேளையில் நாடு முழுவதும் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் எழுச்சி பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வந்தது எப்படி? என்ற கேள்வியும் பாஜகவுக்கு புரியாத புதிராக பாஜகவினரை குழப்பி வருகிறது. இதுமட்டுமின்றி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை குடும்ப அரசியல், ஊழல் உள்ளிட்ட விஷயங்களை பட்டியலிட்டு விமர்சனம் செய்தது ஓட்டாக மாறாதது ஏன்? என்பதும் பாஜகவினரின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இதனை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு ரேவந்த் ரெட்டியை தலைவராக்கியது. தெலுங்கு தேசம் தலைவர்களுடன் அவருக்கு இருக்கும் நட்பு காங்கிரஸ் கட்சியை வளர்ச்சியடைய செய்தது.

ஆனால் பாஜக காங்கிரஸ் கட்சியை கண்டுக்கொள்ளாமல் இருந்தது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து வரும் நிலையில் தெலங்கானாவிலும் அத்தகைய நிலை தான் இருக்கும் என்பதை பாஜக நினைத்தது. இதனால் தான் பாஜக தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியை மட்டுமே டார்க்கெட் செய்து அட்டாக் செய்தது. இந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை பாஜக தற்போது உணர்ந்துள்ளது. இந்நிலையில் தான் பாஜக தற்போது தெலங்கானா சட்டசபை தேர்தல் மீது நம்பிக்கையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மாறாக அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மீது கவனத்தை திருப்பி உள்ளது. அதேவேளையில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

அதன்படி சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதோடு தெலங்கானாவில் ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் பிஆர்எஸ் கட்சிக்கு தேவையான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு இருந்தால் பிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சாத்தியமா? என்பதை நாம் ரிசல்ட் வெளியாகும் டிசம்பர் 3ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இதற்கிடையே தான் ஹைதராபாத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஹாரதி வகீசன் கூறுகையில், ‛‛தெலங்கானாவில் பாஜக வளர்ந்துள்ளது. ஆனால் சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு அந்த கட்சி செல்வாக்கை பெறவில்லை. மாறாக கடந்த முறையை விட பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கும். மேலும் பாஜக மாநில தலைவர் மாற்றம் உள்ளிட்டவை அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர முதல்வருக்கு எதிராக தேசிய தலைவர்கள் பேசிய அளவுக்கு மாநில தலைவர்கள் பேசவில்லை. இதுவும் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தில் ஆதரவு பெருகி வருகிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி மீது அதிருப்தி உள்ளது. இதுவும், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதும் காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் இருந்து விலகி இருப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட சாதி வாக்குகளை காங்கிரஸ் கொத்தாக கிடைக்கும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+