பாஜக எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டிக்கு 7 ஆண்டு சிறை.. சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
ஹைதராபாத்: ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுரங்க முறைகேடு தொடர்பாக 14 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 3400 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 219 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தெலுங்கானாவின் அனந்தபூர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கடந்த 14 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. 3,400 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 219 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்த காலத்தில், 68.5 ஹெக்டேர் மற்றும் 39.5 ஹெக்டேர் இரும்புத் தாது சுரங்க குத்தகைகளை வழங்குவதில் அதிகாரிகள் ஜனார்த்த ரெட்டி சகோதரர்களின் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதன் மூலம் அரசுக்கு 884 கோடி இழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி, ஓஎம்சி நிர்வாக இயக்குநர் பி.வி. ஸ்ரீனிவாச ரெட்டி, சுரங்கத் துறையின் முன்னாள் இயக்குநர் வி.டி. ராஜகோபால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிருபானந்தம், தெலுங்கானா அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, 2022-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒய். ஸ்ரீலட்சுமி, சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் ஆர். லிங்க ரெட்டி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.
அவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 120பி (குற்றச் சதி), 420 (மோசடி), 409 (குற்ற நம்பிக்கை மீறல்), 468 & 471 (மோசடி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13(2) & 13(1)(d) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ, ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி மற்றும் முன்னாள் அதிகாரி பி. கிருபானந்தம் ஆகியோரை சிபிஐ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிபதி டி. ரகு ராம் விடுவித்தார்.
ஓபுலாபுரம் சுரங்க நிறுவன சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என்று ஹைதராபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனரும் OMC-யின் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அப்போதைய சுரங்கம் மற்றும் புவியியல் உதவி இயக்குநரான VD ராஜகோபால், ரெட்டியின் தனி உதவியாளரான மெஹாபுஸ் அலி கான் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்தது. சுரங்க நிறுவனத்தின் எம்.டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஏ1 ஆகவும் ஜனார்த்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தது. தீர்ப்பிற்குப் பிறகு சிபிஐ அதிகாரிகள், ஜனார்த்தன ரெட்டி மற்றும் மற்றவர்களைக் காவலில் எடுத்துள்ளது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications