தெலுங்கானா சட்டசபை தேர்தல்: பாஜகவின் அரசியல் 'பரிசோதனை எலி'யாக சிக்கிய 'பவன் கல்யாண்'..அய்யோ பாவம்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை பல்வேறு "அரசியல்" சோதனைகளுக்கான "எலி" போல பயன்படுத்தி வருகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக வலிமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற பகீரத பிரயத்தனம் செய்கிறது. பாஜகவின் ஒரே நம்பிக்கையாக இருந்த அதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியே ஓடிவிட்டது. கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸுக்கு இணையாக பாஜக மேலே எழுந்து நிற்பது சாத்தியமே இல்லாத ஒன்று. தெலுங்கானா, ஆந்திராவைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு இன்னமும் போராட்டம்தான்.

ஆந்திராவில் ஜெகன் அரசாங்கம்: ஆந்திராவைப் பொறுத்தவரையில் அசைக்க முடியாத சக்தியாக நங்கூரம் பாய்ச்சி உட்கார்ந்திருக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. எப்படியாவது ஜெகனை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தையும் இழந்த செல்வாக்கையும் பெற்றாக வேண்டும் என்கிற வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. இவர்களுடன் நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா எனும் கட்சியை தொடங்கி குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்டத்தில் எப்படி தலையை நுழைத்து ஆவர்த்தனம் செய்வது என்பது பாஜகவின் வியூகம்.
தெலுங்கானா தேர்தல் களம்: அதேபோல தெலுங்கானா சட்டசபை தேர்தல் தற்போது நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ்-க்கு அடுத்ததாக பாஜகதான் என்கிற தோற்றம் சில மாதங்கள் முன்புவரை கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்துமே அது ஒரு மாய தோற்றம்; பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையேதான் தெலுங்கானாவில் போட்டி என்பதை பட்டவர்த்தனமாக போட்டுடைத்தன. தெலுங்கானாவில் எப்படியாவது டபுள் டிஜிட் இடங்களைக் கைப்பற்ற தீவிரம் காட்டுகிறது பாஜக. பிரதமர் மோடி, அமித்ஷா என அத்தனை 'பெருந்தலை'களையும் களமிறக்கி பிரசாரம் செய்கிறது பாஜக.
பாஜகவும் சந்திரபாபு நாயுடுவும்: ஆந்திராவில் ஆட்சி அதிகாரத்தை நோக்கி போராடுகிற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, தெலுங்கானா தேர்தலில் போட்டியிடாமலே ஒதுங்கிக் கொண்டது. ஆனால் ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் ஜனசேனா சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனசேனா இடம் பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை பாஜக கூட்டணியில் இணைப்பதற்கு ஒருவித தயக்கம் நிலவுகிறது. ஆனாலும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் திடீரென தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துவிட்டோம் என்றார். இன்னொரு பக்கம், பாஜக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்கிறோம்; ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியுடனும் கூட்டணி வைத்துள்ளோம் என தன்னிச்சையாகவே அறிவித்தார். இதனை பாஜக ரசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இந்த களேபரங்களுக்கு மத்தியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்தும் பேசினார். இருந்தபோதும் பாஜக தரப்பில் எந்த சிக்னலும் தரப்படவில்லை.
தெலுங்கானா களமும் எதிர்காலமும்: தற்போது தெலுங்கானாவில் பாஜக- ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஜனசேனாவுக்கு ஓபிசி வாக்குகள் வரும் என ஒரு கணக்குப் போட்டுதான் பாஜக கை கோர்த்திருக்கிறது. தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தெலுங்கானா தேர்தல் முடிவுகளில் ஜனசேனா கணிசமான ஓபிசி வாக்குகளை அறுவடை செய்து அம்மாநில அரசியலில் பாஜக- ஜனசேனா கூட்டணி தீர்மானிக்கும் சக்தியாக விஸ்வரூபம் எடுத்தால் அதனடிப்படையில் சந்திரபாபு நாயுடுவுடனான கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் பாஜக எனவும் கூறப்படுகிறது. அதாவது ஆந்திரா, தெலுங்கானா தேர்தல் களத்தில் என்ன மாதிரியான வியூகங்களை கையாள்வது என்பதற்காக ஒரு பரிசோதனை எலியாகவே தற்போது நடிகர் பவன் கல்யாணும் அவரது ஜனசேனாவும் பாஜகவிடம் சிக்கி இருக்கிறது என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications