சந்திரபாபு நாயுடுவை விட அவரின் 3 வயது பேரன் 6 மடங்கு பணக்காரர்: எவ்வளவு சொத்து தெரியுமா?
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் 3 வயது பேரனுக்கு ரூ. 18.71 கோடி சொத்து உள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது குடும்ப சொத்து மதிப்பை ஆண்டு தோறும் தாமாக முன்வந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை அவரின் மகன் நர லோகேஷ் நேற்று மாலை வெளியிட்டார்.

அதன்படி நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 81.83 கோடி ஆகும். கடந்த ஆண்டு ரூ. 69.28 கோடியாக இருந்த சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் ரூ. 12.55 கோடி அதிகரித்துள்ளது.
நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ. 2.53 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்ந்துள்ளது. அவரின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 25 கோடியில் இருந்து ரூ. 31 கோடி ஆகியுள்ளது. நாயுடுவின் மகனும், அமைச்சருமான நர லோகேஷனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ. 15.21 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ. 21.40 கோடியாக அதிகரித்துள்ளது.
லோகேஷின் மனைவி பிராமினியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 15.01 கோடியில் இருந்து ரூ. 7.72 கோடியாக குறைந்துள்ளது. லோகேஷின் 3 வயது மகன் தேவான்ஷின் சொத்து மதிப்பு ரூ. 11.54 கோடியில் இருந்து ரூ. 18.71 கோடியாக உயர்ந்துள்ளது. நாயுடுவை விட அவரின் பேரன் 6 மடங்கு பணக்காரராக உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications