ரோஜா மன்னிப்பு கோர வேண்டும்.. ரஜினியை எப்படி விமர்சிக்கலாம்.. சப்போர்ட்டுக்கு வந்த சந்திரபாபு நாயுடு
ஐதராபாத்: நடிகர் ரஜினிகாந்தை ரோஜா உள்ளிட்டோர் விமர்சனம் செய்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீது ரஜினிகாந்த் எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்றும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த என்டி ராமராவின் 100-வது பிறந்த நாள் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் நடைபெற்றது. இதில், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாதபோதே அந்த துறை பற்றி புரிந்து கொண்டு செயல்பட்டதால் ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்து நியூயார்க் நகரம் போல் வளர்ந்துள்ளது.
ஐதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட அவர் வித்திட்டார். அவருடைய முயற்சியின் காரணமாக இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த ஐடி நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஐதராபாத்தில் துவங்கின" என்று பாராட்டி பேசியிருந்தார்.
சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரும், நடிகையுமான ரோஜா, ரஜினிகாந்த் கருத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, "ரஜினிகாந்த்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.

ரஜினிகாந்த் உண்மை தெரிந்து பேசினாரா, இல்லை சந்திரபாபு நாயுடு எழுதிக்கொடுத்த ஸ்க்ரிப்ட்டை பேசினாரா என்று தெரியவில்லை. ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த், ஐடியாவே இன்றி பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் சென்றால் அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும்.
ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என்டி. ராமராவ் ஆசிகளைப் பொழிகிறார் என்று பேசினார். என்.டி.ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும்?" என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தை விமர்சித்து பேசியதற்கு தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திர பாபு நாயுடு கூறுகையில், ரஜினிகாந்தை ரோஜா உள்ளிட்டோர் விமர்சனம் செய்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டும்.
வாய்க்கொழுப்பு எடுத்து பேசும் தனது கட்சியினரை ஜெகன் மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்க மாட்டார்கள்.. மன்னிக்கவும் மாட்டார்கள். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீது ரஜினிகாந்த் எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications