Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளிக்கு கோலம் போட்ட இந்து குடும்பம்.. "இதெல்லாம் ரொம்ப தப்பு!" ஆவேசமான எதிர்வீட்டு கிறிஸ்தவர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தீபாவளிக்குக் கோலம் தொடர்பாக ஹைதராபாத்தில் இரு வேறு குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த அக். 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லை.

இருப்பினும், இந்தாண்டு கட்டுப்பாடுகள் பெருமளவு நீக்கப்பட்டுவிட்டன. இதனால் மக்கள் பழைய உற்சாகத்துடன் இந்தாண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.

தெலங்கானா

தெலங்கானா

இதனிடையே தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தீபாவளி கோலம் தொடர்பாக திடீரென சர்ச்சை ஏற்பட்டது. கடந்த அக்டோபர் 24ஆம் தீபாவளி தினத்தன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தீபாவளிக்கு ரங்கோலி கோலம் போட்டதற்கு எதிர் வீட்டில் இருந்த கிறிஸ்தவ குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் கூட இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 எதிர்ப்பு

எதிர்ப்பு

அந்த வீடியோவில் வாசலில் ரங்கோலி கோலம் போட்டதற்கு அந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அப்படி கோலம் போட்டால் எப்படி வெளியே சென்று வர முடியும் என்றும் ஆவேசமாகக் கேட்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. இந்தச் சம்பவம் ஹைதராபாத் சிகாபல்லி பகுதியில் உள்ள கோல்கொண்டா கிராஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்துள்ளது.

 போராட்டம்

போராட்டம்

இந்த வீடியோ முதலில் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அங்குள்ள இந்து அமைப்புகள் இதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். அந்த குடியிருப்பிற்கு முன்னால் ஒன்றுகூடிய வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கோலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பொது இடத்தில் கோலம் போடுவதை எப்படி எதிர்க்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

 இந்து அமைப்புகள்

இந்து அமைப்புகள்

கொஞ்ச நேரத்திலேயே இந்து அமைப்பைச் சேர்ந்த பலர் அங்கு ஒன்று கூடினர். மேலும், அவர்கள் ஜெய் ஶ்ரீ ராம் என்றும் கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். இதனால் அங்கு திடீரென பதற்றமான ஒரு சூழல் உருவானது. இதையடுத்து நிலைமை கையைவிட்டுச் செல்லாமல் இருக்க அந்த குடியிருப்பைச் சுற்றி அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு நிலைமை கையை மீறிச் செல்லவில்லை.

 என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

இது தொடர்பாக போலீஸ் ஆய்வாளர் சஞ்சய் குமார் கூறுகையில், "தீபாவளி அன்று ஒரு இந்து குடும்பம் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுவான பகுதியில் ரங்கோலி கோலம் போட்டனர். எதிர் பிளாட்டில் வசிக்கும் கிறிஸ்தவ குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் பொதுவான பகுதியில் எப்படி இதுபோல கோலமிடலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 ஏற்கனவே இருந்த பிரச்சினை தான்

ஏற்கனவே இருந்த பிரச்சினை தான்

அந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே பல பிரச்சினைகள் இருந்து உள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இப்போது கோலம் தொடர்பாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். அந்த குடும்பத்தினர் மீது ஐபிசி 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+