நிற்காத மழை! மேக வெடிப்புக்கு பின் வெளிநாட்டு சதி.. குண்டை தூக்கி போடும் தெலுங்கானா முதல்வர்!
ஹைதராபாத்: வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியின் காரணமாகவே மேகவெடிப்பு ஏற்படுகிறது எனதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் இருந்து பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதிலும் குறிப்பாக ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கான, கர்நாடாக போன்ற மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. இதில் தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தில் மிதக்கும் தெலுங்கானா
அந்த வகையில் ஒருவாரமாக தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கன மழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள பத்ரசலாம் அணையின் நீர் மட்டம் 53 அடியை கடந்த நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ளது.

ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்
கனமழையால் பல இங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய, அரிதான நிகழ்வு ஆங்காங்கே தற்போது நடந்து வருகிறது. இந்த மேக வெடிப்பு சதியாக கூட இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர்.

வெளிநாடுளின் சதி
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் கூட காஷ்மீர் அருகே இது போன்ற மேக வெடிப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும், தற்போது கோதாவரி பகுதியிலும் மேக வெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன" என்றார்.

மேக வெடிப்பு என்றால் என்ன?
பொதுவாக மேகங்கள் உருவாவததற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தினை விட மிக குறைவான நேரத்தில் மழைமேகங்கள் உருவாகி, மெதுவாக பொழியாமல் ஒரே இடத்தில் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை கொட்டித் தீர்த்தால் அது தான் மேகவெடிப்பு. ஒரே இடத்தில் திடீரென 10 செண்டி மீட்டருக்கு மேலும் மழை பெய்யும் போது அந்த இடத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக மலைப்பகுதி என்றால் அங்கு மலைச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அணைப்பகுதி என்றால் அணையின் நீர்மட்டம் சற்று நேரத்தில் 10 செ.மீ அதிகரிக்கும். இதனால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications