விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பெண் நீதிபதி முன்பே.. ஆடிப்போக வைத்த பெண்.. வீடியோ பாருங்க
ஹைதராபாத்: ஒரு வழக்கறிஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி, விசாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பெண் கத்தியுடன் வந்து செய்த செயல் நீதிபதியை ஆடிப்போக வைத்துள்ளது. விசாகப்பட்டினம் நகரின் அக்கையபாலனியைச் சேர்ந்த லட்சுமி என்பவர், திங்கள்கிழமை மதியம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியின் அறைக்கு வந்துள்ளார். அங்கு கோர்டில் இருந்த பெண் நீதிபதிக்கு முன்பாக நின்றார்.
ஒரு சிவில் வழக்கில் வழக்கறிஞருக்கு (சத்யநாராயண மூர்த்தி) கட்டணம் செலுத்தியதாகவும், ஆனால் அந்த வழக்கறிஞர் வழக்கின் விவரங்கள் எதையும் கூறாமல் தனக்கு அநீதி இழைப்பதாகவும் கூறிய அவர், தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கோரினார். இல்லையெனில், தன்னுடன் கொண்டு வந்திருந்த கத்தியை காட்டிய அந்த பெண், நீதிமன்ற அறையிலேயே தன்னைத்தானே வெட்டிக்கொள்வதாக கூறினார்.

இதை கேட்டு பெண் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். சில வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் அவரைச் சமாதானப்படுத்தி சுற்றி வளைத்தனர். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, அவரது மனநிலை சரியில்லை என்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
A Worrying Scene in Visakhapatnam Court 😑
— Aparajite (@amshilparaghu) April 29, 2026
This woman named Lakshmi from Akkayyapalem entered the District Women’s Court in Visakhapatnam on April 27, 2026.
She stood before the judge in deep anger and pain, she pulled out a blade and threatened to harm herself in the courtroom… pic.twitter.com/9rkAAshhKf
நீதிமன்றத்தை ஏமாற்றி விவகாரத்து வாங்கிய பெண்
மத்திய பிரதேசத்தில் ஒரு பெண், தனது கணவரின் சொந்த சகோதரியை அவரது இரண்டாவது மனைவியாகக் காட்டி, குடும்ப நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி விவாகரத்து பெற்ற சம்பவம நடந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த கணவர், தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த பெண், 1998-ல் மார்க்கெட்டி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், அவர் தனது தொழில் காரணமாக வீட்டிலிருந்து விலகி அடிக்கடி வெளியூரில் வசித்து வந்தார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் காரணமாக, அவர் 2015 முதல் அந்த பெண் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழலில், அவர் எத்தனை முறை விவாகரத்து கேட்டும், கணவர் மறுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2021-ல், அவர் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகினார். தனது கணவர் மறுமணம் செய்துகொண்டதாகவும், அதனால் விவாகரத்து கோருவதாகவும் அவர் கூறினார். இதற்கு ஆதாரமாக, தனது கணவர், அவரது சகோதரி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை அவர் காட்டினார். இதன் அடிப்படையில், நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கியது. இதனிடையே அண்மையில் விவாகரத்துத் தீர்ப்பு வந்தபோது, தனது மனைவி ஆதாரமாகக் காட்டிய புகைப்படம் குறித்து கணவருக்கும் தெரியவந்தது. அத்துடன்நீதிமன்றத்தை ஏமாற்றி விவாகரத்து வாங்கிவிட்டதாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை கணவர் அணுகி உள்ளார்.












Click it and Unblock the Notifications