‛சிக்சர்’... பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்! காரணம் இதுதான்
அமராவதி: ஆந்திராவில் இன்று முதல் மாநிலம் முழுவதும் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று விரிவாக கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது.
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் மாநிலம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களும், மத்திய அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கூறி வருகின்றனர்.

அதோடு காங்கிரஸ் உள்பட பல மாநில கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் கூட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அந்த அரசு அறிவித்தது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா கூறினார்.
மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து சாதியை சேர்ந்தவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் சீனிவாசன வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்து இருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் 139 பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்த சாதிவாரி கணக்கெடுப்பு என்பது உதவியாக இருக்கும்'' என்றார்.
அதன்படி கடந்த 15ம் தேதி சோதனை முயற்சியாக மாநிலத்தில் 2 நாட்கள் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. இதையடுத்து இன்று முதல் மாநிலம் முழுவதும் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சாதி சங்கங்களின் தலைவர்களுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் மாநிலம் அளவிலும், மாவட்ட அளவிலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் பீகாரை பின்பற்றி ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். தற்போது ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளதால் தமிழகத்திலும் இந்த கோரிக்கை வலுக்க வாய்ப்புள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications