தெலுங்கானா சட்டமேலவை தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவராக 'ரீ என்ட்ரி' நடிகை விஜயசாந்தி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான (எம்.எல்.சி) (MLC) தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை விஜயசாந்தி களம் காண்கிறார்.
1979-ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமது 13-வது வயதி திரை உலகில் கால் பதித்தவர் நடிகை விஜயசாந்தி. லேடி சூப்பர்ஸ்டாராக தென்னிந்திய திரை உலகில் கோலோச்சினார்.

1998-ம் ஆண்டே பாஜகவில் இணைந்தார். பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானியின் பேரன்புக்குரியவராக வலம் வந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவின் மகளிரணி செயலாளராகவும் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாடு தழுவிய அளவில் விஜயசாந்தி பெரும் கவனம் பெற்றார். அந்த தேர்தலில் தெலுங்கானாவில் சோனியா காந்தி போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக பாஜக வேட்பாளராக விஜயசாந்தி அறிவிக்கப்பட்டார். ஆனால் சோனியா காந்தியோ பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டார். இதனால் விஜயசாந்தி தேர்தலில் களம் காணாமல் இருந்தார்.
2005-ம் ஆண்டு தனி தெலுங்கானா கோரிக்கைக்காக தாய் தெலுங்கானா என்ற தனி கட்சியை தொடங்கினார் நடிகை விஜயசாந்தி. ஆனால் இந்த கட்சி மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை. இதனால் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து களம் கண்ட டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார் விஜயசாந்தி.
ஆனால் டிஆர்எஸ் கட்சியிலும் நீண்டகாலம் நீடிக்காத விஜயசாந்தி 2014-ல் காங்கிரஸில் இணைந்தார். அப்போதைய சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த விஜயசாந்தி நீண்டகாலம் அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ராகுல் காந்தி மூலம் விஜயசாந்திக்கு காங்கிரஸில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.

ஆனாலும் 2020-ல் பாஜகவுக்கு மீண்டும் தாவினார் நடிகை விஜயசாந்தி. பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டது. தெலுங்கானா பாஜக தலைவர் பதவியை எதிர்த்த விஜயசாந்திக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிவிட்டார் விஜயசாந்தி.
2023-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த விஜயசாந்திக்கு இப்போது தெலுங்கானா மாநில சட்ட மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை மட்டுமே உள்ளது; தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை மற்றும் சட்ட மேலவை (எம்.எல்.சி MLC) உண்டு. தெலுங்கானா சட்ட மேலவை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களில் ஒருவராக நடிகை விஜயசாந்தியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications