கர்நாடக மாடலை கையில் எடுத்த காங்கிரஸ்.. தெலுங்கானாவில் சந்திரசேக ராவ், பாஜகவுக்கு ஷாக்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள் களத்தில் பெரும் தாக்கத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி ஏற்கனவே 115 வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக எப்படியாவது தெலுங்கானாவில் வெல்ல முடியுமா என கனவு காண்கிறது. முதல்வர் கேசிஆருக்கு எதிரான அதிருப்தி அலை காங்கிரஸுக்கு சாதகமாக வரும் என காத்திருக்கிறது.

தெலுங்கான கள நிலவரம்: தெலுங்கானா தேர்தலில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையேதான் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிஆர்எஸ் கட்சிக்கு ஓவைசி கட்சியின் ஆதரவு இருப்பதால் பெரும் நம்பிக்கையோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் அக்கட்சி உள்ளது. தெலுங்கான தேர்தல் கருத்து கணிபபுகளும் பிஆர்எஸ்க்கு சாதகமானதாகவே இருக்கின்றன.
காங்கிரஸ் அதிரடி வாக்குறுதிகள்: இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெலுங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிடியாக வாக்குறுதிகளை அறிவித்தார். தெலுங்கானா தேர்தல் களத்தில் காங்கிரஸின் வாக்குறுதிகளாக பெண்களுக்கு மாதம் ரூ2,500, சிலிண்டர் விலை ரூ500, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகளை சோனியா காந்தி அறிவித்தார்.
தமிழ்நாடு, கர்நாடகா: தமிழ்நாட்டில் 2021 சட்டசபை தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் ரூ1,000 வழங்குவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி அக்கட்சியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தது என்பது விமர்சகர்களின் கருத்து. அதேபோல கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு மாதம் ரூ2,000 வழங்குவோம் என அறிவித்தது. இந்த வாக்குறுதி கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
நடைமுறைப்படுத்துதல்: அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு இரண்ட்ரை ஆண்டுகள் கழித்துதான் பெண்களுக்கு ரூ1,000 வாக்குறுதியை நிறைவேற்றியது. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உடனடியாக இந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தியது. இதற்கு காரணமே அண்டை மாநிலமான தெலுங்கானா தேர்தல்தான் என கூறப்படுகிறது.
கர்நாடகாவில் சாதித்த காங்.: தற்போது கர்நாடகாவில் பெண்களுக்கு ரூ2,000 வாக்குறுதி கொடுத்தோம்; அதன்படியே ரூ2,000 வழங்கிவிட்டோம். தெலுங்கானாவில் ரூ2,500 தருவாக வாக்குறுதி அளித்துள்ளோம்.. காங்கிரஸுக்கு வாக்களித்தால் கர்நாடகா பெண்களைப் போல உங்களுக்கும் மாதம் ரூ2,500 கிடைக்கும் என பிரசாரம் செய்கிறது காங்கிரஸ்.
கர்நாடகாவை முன்வைத்து பிரசாரம்: தேர்தலில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்தான். 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், இதுவே திராவிட மாடல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த திராவிட மாடல் பார்முலாவைத்தான் கர்நாடகாவில் செயல்படுத்தியது காங்கிரஸ். அடுத்ததாக தெலுங்கானாவுக்கும் முயற்சிக்கிறது. காங்கிரஸுக்கு காலம் பதில் சொல்லும்தானே!
-
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications