தெலுங்கானா: 'தனிக்காட்டு ராஜா' கேசிஆர்-ன் 'ஹாட்ரிக்' சிஎம் கனவை வெடிவைத்து தகர்க்குதாம் காங்கிரஸ்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 முதல் 65 இடங்களைக் கைப்பற்றும்; ஆளும் பிஆர்எஸ் கட்சி 45 முதல் 55 இடங்களில்தான் வெல்லும் என்கிறது Democracy Times Network எக்ஸிட் போல் முடிவுகள்.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், ஜனசேனா கட்சிகள் களத்தில் உள்ளன. தெலுங்குதேசம் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியானது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 93 லட்சம் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு, தலித் குடும்பங்களுக்கு ரூ10 லட்சம் மானியம், மூத்த குடிமக்கள், விதவைகள் ஓய்வூதியம் ரூ5,000 ஆக உயர்வு, ரூ400க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 1 லட்சம் டபுள் பெட்ரூம் வீடுகள் உள்ளிட்டவைகளை வாக்குறுதிகளாக கொடுத்தது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், முதியோர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் ஓய்வூதியம், ரூ500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ12,000, மாணவர்கள் கல்விக்காக ரூ5 லட்சம் நிதி உதவி அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

தெலுங்கானா பாஜக, 4 இலவச சிலிண்டர்கள், முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து, நெல் குவிண்டாலுக்கு ரூ3,100, புழுங்கல் அரிசி கொள்முதல், ஏழை குடும்ப பெண் குழந்தைகளுக்கு ரூ2 லட்சம்,, பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியது.
2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள்: (மொத்தம் 119 இடங்கள்- பெரும்பான்மைக்கு தேவை 60)
பிஆர்எஸ் கட்சி- 88 இடங்கள் (46.9%)
காங்கிரஸ் கட்சி- 19 இடங்கள் (28.4%)
ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி- 7 இடங்கள் (2.7%)
தெலுங்குதேசம் கட்சி - 2 இடங்கள் (3.5%)
பாஜக - 1 இடம் (6.98%)
Democracy Times Network எக்ஸிட் போல் முடிவுகள்:
பிஆர்எஸ் கட்சி- 45 முதல் 55 இடங்கள்
காங்கிரஸ் கட்சி- 52 முதல் 65 இடங்கள்
ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி- 6 முதல் 7 இடங்கள்
பாஜக - 3 முதல் 9 இடங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications